கன்னட திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து டோலிவுட் சென்று தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தன. அதன்பிறகு புஷ்பா படத்தின் மூலம் அவர் பேன் இந்தியா நடிகையாகவும் மாறினார்.

அதோடு தமிழ் திரையுலகிலும் கால் பதித்த அவர் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். அதன் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக “வாரிசு” படத்தில் நடித்திருந்தார். இப்படி டோலிவுட், கோலிவுட் என்று கலக்கிய ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்று தற்போது அங்கும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இதன் காரணமாக மும்பையிலேயே செட்டில் ஆயிருக்கும் ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த படங்களில் பிசியாக காணப்படுகிறார். தெலுங்கில் அவருக்கு புஷ்பா 2 படம் இருக்கிறது. அதேபோன்று தமிழிலும் ரெயின்போ படத்தில் நடித்து வருகிறார். அது தவிர்த்து இந்தியில் அனிமல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா மந்தனா அடுத்த படத்திற்கான வேலைகளிலும் இறங்கி உள்ளார். அனிமல் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த படமானது நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகரான டைகர் ஷெராப்புடன் இணைந்து யூடியூப் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா மிகவும் ஜாலியாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டியின் போது தொகுப்பாளர் நீங்கள் நரூட்டோவை ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டீர்களாமே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ராஷ்மிகா மந்தனாவும் : ஆமாம் என் இதயமே நரூட்டோவுக்கு தான் அந்த கதாபாத்திரத்தை முழுவதுமாக திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார். இப்படி வெளிப்படையாக பேசியதும் நரூட்டோ யார்? என்பது குறித்த தேடல் அனைவரது மத்தியிலும் இருந்தது.
இறுதியில் அது ஒரு கார்டூன் கதாபாத்திரம் என்பது தெரியவந்தது. உலக அளவில் அந்த கதாபாத்திரத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வரும் வேளையில் நடிகை ராஷ்மிகாவும் அந்த கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு ஒரு தீவிர ரசிகையாம். எனவே அந்த கதாபாத்திரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் விளையாட்டாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்டில் கூட நரூட்டோ பொம்மையை முத்தமிட்ட வாறு என்னுடைய லவ்வர் என்று குறிப்பிட்டு அவர் அந்த புகைப்படத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.





