- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் தனுஷ், உடனடியாக அறிக்கை வெளியிட்ட...

ரூ. 10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகர் தனுஷ், உடனடியாக அறிக்கை வெளியிட்ட நயன்தாரா; லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவு தெரிவித்த நடிகைகள் – பஞ்சாயத்து பயங்கரமா டெவலப் ஆகுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் இயக்குனர் கௌதம மேனன் இயக்கத்தில் ஒரு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது.

இந்த படத்துக்கு Nayanthara Beyond the Fairy Tale என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பின் மிகத் தாமதமாக வருகிற 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நயன்தாராவின் சிறு வயது முதல் முன்னணி கதாநாயகியாக அவர் உச்சம் தொட்ட வரை பல சம்பவங்களை தொகுத்து திருமண வீடியோவுடன் ஆவணப்படமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் நயன்தாராவின் காதல் வாழ்க்கையை பற்றிய காட்சிகளும் இடம்பெறுகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தின் நடித்த போதுதான் விக்கி, நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனால் அந்த படத்தில் இடம்பெற்ற படப்பிடிப்பு வீடியோ காட்சிகளை பயன்படுத்திக் கொள்ள, படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் நயன்தாரா விக்னேஷ் சிவன் அனுமதி கேட்டு இருந்தனர்.

ஆனால் 2 ஆண்டுகளாக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் இதற்கான அனுமதியும், என்ஓசியும் தரவில்லை. அதனால் நயன்தாரா தனது செல்போனில் எடுத்திருந்த ஒரு காட்சியை Nayanthara Beyond the Fairy Tale ஆவணப் படத்தில் பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் தனுஷ் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

- Advertisement -

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷ் மீது, நடிகை நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டுள்ளார். தற்போது நயன்தாரா, நடிகர் தனுஷ் மீது பல்வேறு புகார்களை அடுக்கிய நிலையில் தனுஷூடன் மற்ற படங்களில் நடித்த சில நடிகைகள், நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மரியான் படத்தில் தனுஷூடன் நடித்த நடிகை பார்வதி, நையாண்டி படத்தில் நடித்த நஸ்ரியா, இவர் நடிகர் பகத் பாசில் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வடசென்னை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், 3 படத்தில் நடித்த கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன், கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அஞ்சு குரியன், மஞ்சிமா மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் இந்த பஞ்சாயத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்