- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு… -...

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம், லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு… – உற்சாகத்தில் மக்கள் செல்வன் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முனணனணி நடிகர் விஜய் சேதுபதி, இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் பரோட்டா மாஸ்டராக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார். திருச்செந்தூர், தூத்துக்குடி, மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதி, விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் வாரத்தில் 2 நாட்கள் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விடுகிறார். மேலும் விடுதலை 2 படத்திலும் அவ்வப்போது பேட்ச் ஒர்க் காட்சிகளில் நடிக்க செல்வதும் வழக்கமாக உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் டிரெயின் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கோவையில் இருந்து சென்னை வரும் ரயிலில் நடக்கும் ஒரு நாள் சம்பவங்களை வைத்து இந்த படத்தை மிஷ்கின் உருவாக்கி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

டிரெயின் படத்தில் வினய் ராம் பாவனா சம்பத்ராஜ் பப்லு பிருத்விராஜ் கேஎஸ் ரவிக்குமார் கணேஷ் வெங்கட்ராமன் சுனிதா, தியா சீதிபள்ளி சிங்கம்புலி யோகி சேது ஸ்ரீரஞ்சனி அஜய் அருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டெவில் படத்திற்கு பிறகு டிரெயின் படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டார்க் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள டிரெயின் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ரயிலில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி எடுத்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி, மிஷ்கின் முதன்முறையாக கைகோர்த்துள்ள இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெயின் படத்தை வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எஸ் தாணு மற்றும் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஜனவரி 14ம் தேதி பொங்கல் ரிலீஸ் படங்களில் ஒன்றாக டிரெயின் படம் வௌியாக அதிக வாய்ப்புள்ளதால், மக்கள் செல்வன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்