- Advertisement -
Homeபொழுதுபோக்குகடுமையாக சாடிய நயன்தாரா... கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளை பார்க்கச் சென்ற தனுஷ்... சரியா போச்சு போங்க...

கடுமையாக சாடிய நயன்தாரா… கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த வேலைகளை பார்க்கச் சென்ற தனுஷ்… சரியா போச்சு போங்க…

- Advertisement -

தமிழ் சினிமா அல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் இப்போது ஒரே ஹாட் டாபிக் நயன்தாரா தனுஷ் இடையே ஆன மோதல் தான். தனது திருமண டாக்குமென்டரிக்காக, நானும் ரவுடிதான் திரைப்படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும் ஆனால் தனுஷ் அதற்கு மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார் நடிகை நயன்தாரா.

 

- Advertisement -

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த அவர், நடிகர் தனுசை கடுமையாக சாடி இருந்தார். கஸ்தூரிராஜாவின் மகனும் செல்வராகவனின் சகோதரனும் ஆகிய தனுஷ் என்று தான் அவர் தனது லெட்டர் பேடில் ஆரம்பித்து இருந்தார். தனது டாக்குமென்ட்ரியின் டீசரில் வெறும் மூன்று வினாடிகள் காட்டிய, அந்தக் காட்சிக்கு தனுஷ் பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

- Advertisement -

இது எந்த வகையில் நியாயம் என்றும், அவரால்தான் தங்களது திருமண டாக்குமென்டரி இரண்டு வருடங்கள் தள்ளிப் போனதாகவும் அவர் பேசியிருந்தார். நீங்கள் மேடையில் ரசிகர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் ஆனால் கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார் தனுஷ் என்றும் அவர் பேசியிருந்தார்.

 

அது மட்டுமல்ல ஜெர்மனில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு அது நீங்கள் தான் என்று பேசி இருந்தார். அதாவது பிறர் துன்பத்தின் மகிழ்ச்சி காணும் நபர் என்று தனுஷை குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நயன்தாராவின் இந்த கருத்துக்கு பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக கமலின் மகள் ஸ்ருதிஹாசன், மலையாள நடிகை பார்வதி ஆகியோர் நயன்தாராவின் போஸ்டிற்கு லைக் தெரிவித்திருந்தனர்.

 

அதேசமயம் நடிகர் தனுஷிற்கு ஆதரவாகவும் பலர் இணையத்தில் பேசி வருகின்றனர். நானும் ரவுடிதான் அவர் தயாரித்த படம் அதை அவர் கொடுக்க இருப்பதும் மறுப்பதும் அவருடைய தனிப்பட்ட உரிமை இதில் எப்படி நயன்தாரா கேள்வி எழுப்ப முடியும் என்று கூறி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் தனுஷ் இதற்கு என்ன பதில் அளிக்க போகிறார் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

ஆனால் இதையெல்லாம் நடிகர் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. அவர் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலில் பாட சென்று விட்டார். ஏற்கனவே அவர் வழிநெடுக காட்டுமல்லி பாடலை பாடியிருந்தார். இதேபோல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஒரு பாடலையும் அவர் இயக்க இருக்கிறார். இட்லி கடை படத்தின் பணிகளிலும் அவர் முழுமூச்சாக இருப்பதால், தனுஷிடம் இருந்து பதில் வருவது கஷ்டம் எனப் பேசி வருகிறது கோலிவுட் திரையுலகம்.

- Advertisement -

சற்று முன்