- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பான்னா பேருன்னு நினைச்சியா, புஷ்பான்னா பிராண்டு, தெறிக்கும் காட்சிகளுடன் வெளியான புஷ்பா 2 டிரெய்லர் -...

புஷ்பான்னா பேருன்னு நினைச்சியா, புஷ்பான்னா பிராண்டு, தெறிக்கும் காட்சிகளுடன் வெளியான புஷ்பா 2 டிரெய்லர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது பழைய பழமொழியாக இருந்தாலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளும் புதிய மொழியாகவும் இருக்கிறது. இன்று மாலை வெளியான புஷ்பா 2 டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். புஷ்பாவின் விறுவிறுப்பு புஷ்பா 2 விலும் சிறிதும் குறையவில்லை என்பதை முன்னோட்ட காட்சிகளே நிரூபிக்கின்றன.

கடந்த 2021ம் ஆண்டில் டிசம்பர் மாத இறுதியில் வெளியான புஷ்பா படத்தின் 2ம் பாகம் வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இரண்டாம் பாகத்தையும் டைரக்டர் சுகுமாரன் இயக்கிய நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரிய பொருட் செலவில் தயாரித்திருக்கிறது.

- Advertisement -

முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில், ஜெகதீஷ் உள்ளிட்டோர் புஷ்பா 2ம் பாகத்திலும் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் போட்டது போல, இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஐட்டம் பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

இன்று மாலை புஷ்பா படத்தின் 2ம் பாகம் டிரெய்லர் வெளியானது. அதிரடி சண்டைக்காட்சிகளுடன் செம்மர கடத்தலை மையமாக கொண்டே 2ம் பாகமும் கதைக்களமாக உருவாகி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து அசத்தி இருக்கிறார். ஆக்‌ஷனில் அல்லு அர்ஜூன் பின்னி பெடலெடுத்து இருப்பதை காண முடிகிறது.

- Advertisement -

புஷ்பான்னா பேரு இல்லே, பிராண்டு… புஷ்பான்னா நேஷனல் இல்லே, இண்டர்நேஷனல் போன்ற பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்திருக்கின்றன. நிச்சயமாக புஷ்பா தி ரைஸ் போலவே, புஷ்பா தி ரூல் படமும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அதை டிரெய்லரே உறுதிப்படுத்தி விட்டது.

புஷ்பா முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள், பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றன. பாடல் காட்சிகளும் அசத்தலாக உள்ளன. இதில் பாடல்களுக்கு மட்டுமே தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில், தமன் பின்னணி இசை அமைத்துள்ளார். மொத்தத்தில் புஷ்பா 2 பெரிய அளவில் பிளாக் பஸ்டர் மூவி என்பதை தெறிக்க விடும் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

புஷ்பா 2 டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்யவும்;https://youtu.be/bOanC7BozKY?si=91JosEIE3xt90FEb

- Advertisement -

சற்று முன்