- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படம் கற்றுத் தந்த பாடம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு சூர்யா வைத்த வேண்டுகோள் -...

கங்குவா படம் கற்றுத் தந்த பாடம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜூக்கு சூர்யா வைத்த வேண்டுகோள் – கைப்புள்ள ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்களே?

- Advertisement -

கடந்த 14ம் தேதி நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன், யூவி கிரியேஷன் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் மிக மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட கங்குவா படம் 200 கோடி ரூபாய் வசூலிக்குமா என்பதே கேள்விக்குறியாக எழுந்துள்ளது.

இது கங்குவா அல்ல கத்துவா என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு படத்தில் சூர்யா மணிக்கணக்கில் கத்திக்கொண்டே இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி படம் வெளியாவதற்கு முன்பு பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் சூர்யா, இந்த படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று சொன்னார்.

- Advertisement -

மேலும் கங்குவா படத்தை எல்லாரும் வாயை பிளந்துகிட்டு பார்ப்பார்கள் என்று பெரிய பில்டப் கொடுத்து கொஞ்சம் ஓவராகவே பேசி விட்டார். இப்போது அதையே வைத்து பலரும் சூர்யாவை கிண்டலடித்து வருகின்றனர். காதை பொத்திக் கொண்டுதான் இந்த படத்தை பார்க்க வேண்டும். வாயை பிளந்து கொண்டு யாரும் பார்க்க மாட்டார்கள் என்று கூறி வருகின்றனர்.

படத்தின் சத்தத்தை இரண்டு புள்ளிகள் குறைக்க சொல்லி படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தியேட்டர் ஓனர்களிடம் கூறிய நிலையில் தயவு செய்து இந்த படத்தில் மொத்த சத்தத்தையும் குறைத்து விட்டு மவுன மொழி படமாக கூட காட்டுங்கள். நாங்கள் ஒரு பொம்மை படமாக அதை பார்த்துவிட்டு வெளியே வந்து விடுகிறோம். தயவு செய்து சத்தம் மட்டும் வைக்காதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இப்போது கங்குவா படம் இந்தியன் 2 படத்தை விட மிக மோசமான படம் என்ற வெற்றியை பெற்றுவிட்டது என்று பலரும் கிண்டலடிப்பதால் பயங்கரமான அப்செட்டில் நடிகர் சூர்யா இருந்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் கங்குவா படம் தந்த ரிசல்ட் சூர்யாவை அப்செட் செய்திருக்கிறது. இதனால் தனது 44வது படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் சில முக்கிய கோரிக்கைகளை சூர்யா வைத்துள்ளார்.

அதன்படி படத்தில் காண்பிக்கும் காட்சிகளை மட்டுமே டிரெய்லரில் வைக்க வேண்டும். படம் எப்படி இருக்கிறதோ அந்த விஷயங்களை முன் வைத்தே பிரமோசனில் ஈடுபட வேண்டும். எக்காரணம் கொண்டும் மிகப்பெரிய அளவுக்கு பில்டப் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று சூர்யா கூறியிருக்கிறார். அதனால் சூர்யா 44 படம் பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் திரைக்கு வர இருக்கிறது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்று சூர்யாவுக்கு இப்போதுதான் புரிந்ததா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்