- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமண வீடியோ விவகாரத்தில் புது திருப்பம், நடிகர் தனுஷை நேரில் சந்திக்க விரும்பிய நயன்தாரா -...

திருமண வீடியோ விவகாரத்தில் புது திருப்பம், நடிகர் தனுஷை நேரில் சந்திக்க விரும்பிய நயன்தாரா – அடுத்து நடந்ததுதான் இதுல பெரிய டிவிஸ்ட்!

- Advertisement -

நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். அந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடித்த போதுதான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகினர்.

அதன்பிறகு 7 ஆண்டுகள் கழித்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அப்போது மாமல்லபுரத்தில் மிக பிரமாண்டமாக நடந்த அவர்கள் திருமணத்தை இயக்குனர் கௌதம் மேனன் தலைமையில், ஒரு சினிமா படம் போல எடுத்தனர்.

- Advertisement -

நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண காட்சிகளுடன், நயன்தாராவின் வாழ்க்கை பயணம் பற்றிய ஒரு ஆவணப்படமாக அதை உருவாக்கி, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ. 80 கோடி வரை விலை பேசி அந்த ஆவணப்படத்தை விற்றதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் என்ற பெயரிடப்பட்ட அந்த ஆவணப்படத்தில் மிக முக்கிய பதிவாக, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்ட நானும் ரவுடிதான் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தி உள்ளனர். அதற்காக அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் என்ஓசி கேட்ட போது அவர் மறுத்ததும், அதை பயன்படுத்தியதற்காக ரூ. 10 கோடி கேட்டதும்தான் இப்போது பெரிய பஞ்சாயத்தாக போய்க்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் இந்த விஷயம் தொடர்பாக நடிகை நயன்தாரா, தனுஷின் நண்பர் மற்றும் மேனேஜர் ஸ்ரேயாஸ் என்பவரை போனில் தொடர்பு கொண்டு, என்ஓசி குறித்து கேட்டிருக்கிறார். அப்போது தனுஷ் அதை தர முடியாது என்று மறுத்துவிட்டார். அதை ஸ்ரேயாஸ், நயன்தாராவிடம் கூறியிருக்கிறார்.

அப்போது, இதுகுறித்து நான் தனுஷிடம் நேரில் சந்தித்து பேச அப்பாயின்மென்ட் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதையறிந்த நடிகர் தனுஷூம் அலுவலகத்தில் நான் இருக்கும் ஒரு நாளில் நயன்தாரா வந்து பார்க்க வருமாறு கூறிவிடுங்கள் என்று சம்மதித்திருக்கிறார். அதை நயன்தாராவிடம் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் கூறிய போது, நான் எப்படி அவர் அலுவலகத்துக்கு வர முடியும், அவரை என் அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதில் ஏகப்பட்ட கடுப்பான தனுஷ்தான், இனி என்ஓசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்