- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் ரகுமான் - சாயிரா பானு பிரிவின் எதிரொலி; அதே நாளில் கணவரை பிரிந்த பெண்...

ஏஆர் ரகுமான் – சாயிரா பானு பிரிவின் எதிரொலி; அதே நாளில் கணவரை பிரிந்த பெண் இசைக்கலைஞர் – தன் அப்பா ஏஆர் ரகுமான் குறித்து பதிவிட்ட மகன் அமீன்!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ ஆர் ரகுமான். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் சினிமாவில் இசையமைத்து பெரிய உச்சத்தை தொட்டார்.

ஜெய் ஹோ என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருதையும் வென்று ஏஆர் ரகுமான் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதுவரை 7 முறை தேசிய விருது பெற்றவர் ஏ ஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுஜீவிதம் படத்தில் இசையமைத்ததற்கும் தற்போது ஹாலிவுட் இசை மீடியா விருதை, ஏஆர் ரகுமான் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 1995ம் ஆண்டில் சாயிரா பானு என்பவரை ஏஆர் ரகுமான் திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு ரஹிமா, கதீஜா என்ற இரண்டு மகள்கள், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் கதீஜாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரஹிமா, அமீன் ஆகியோர் திருமண வயதில் உள்ளனர்.

ஏஆர் ரகுமான், சாயிராபானு தம்பதிக்கு திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில், ஏஆர் ரகுமானின் மனைவி சாயிரா பானு 2 தினங்களுக்கு முன் தனது கணவர் ஏஆர் ரகுமானை பிரிவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார். இது பலத்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்தியிலும் ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த ஏஆர் ரகுமானும், உடைந்த இதயங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கக்கூடும் என்று பதில் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஏஆர் ரகுமானின் இசைக்குழுவில் கிடார் வாசிக்கும் பெண் இசைக்கலைஞர் மோனிகா டே என்பவரும் தன் கணவர் மார்க் என்பவரை பிரிவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அதனால் ஏஆர் ரகுமானுக்கும் மோனிகா டேவுக்கும் உள்ள நெருக்கம் காரணமாகவே சாய்ரா பானு, தன் கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது.

இந்நிலையில் ஏஆர் ரகுமான் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது, என் தந்தை ஒரு லெஜண்ட் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகளாக அவர் சம்பாதித்த மதிப்பு மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட். ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது. ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். பொய்யான தகவல் பகிர்வதை தவிர்க்கவும். அவரின் கண்ணியத்தை மதித்து அதனை காக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்