சமீபத்தில் நடிகர்கள் சிம்பு, விஷால் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் மீது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரெட்கார்டு போடப்பட்டது. அதாவது தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் தர வேண்டிய தொகைகள் பாக்கி இருப்பதால், அவர்கள் தொடர்ந்து நடிக்க அனுமதிக்க கூடாது என்பதற்காக இந்த ரெட்கார்டு விஷயத்தை தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்தது.
அதனால் விஷால், சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர் இப்போது நடித்து வரும் படங்கள் தவிர புதிய படங்கள் எதிலும் நடிக்க கூடாது. அதற்கு தயாரிப்பாளர் யாரும் முன்வரக்கூடாது. குறிப்பாக பெப்ஸி அமைப்பில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் இதில் இந்த 3 நடிகர்களின் படப்பிடிப்பில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று பெப்ஸி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணிக்கு கடிதம் கொடுத்தது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசி ஆர்கே செல்வமணி, நாம் இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். இதற்காக தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என சிலரை ஒருங்கிணைத்து ஜாயின்ட் ஆக்டிவ் கமிட்டி ஒன்றை உருவாக்கி, அதன்மூலமாக மட்டுமே பிரச்னைக்குரிய நடிகர்களுக்கு ரெட்கார்டு போட திட்டமிட்டோம். அதைதான் நடைமுறைப்படுத்த இருந்தோம்.
ஆனால் இப்போது நீங்கள் தயாரிப்பாளர் சங்கம் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுத்து 3 நடிகர்கள் மீது ரெட்கார்டு கொண்டு வரச் சொன்னால், அவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைத்து தரக்கூடாது என்று சொன்னால் அது சரியல்ல. தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என 2 பிரிவுகளில் நீங்கள் செயல்படுவது உங்களது பிரச்னை.
அதனால் ஜாயின்ட் ஆக்டிவ் கமிட்டி உருவாக்கி, மற்ற அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து அங்கு எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே இறுதியாகவும் உறுதியானதாகவும் இருக்கும். அதனால் இப்போதைக்கு நீங்கள் சொல்லும் சிம்பு, தனுஷ், விஷால் படங்களில் பணிபுரிய பெப்ஸி உள்ளிட்ட பிற தொழில் அமைப்புகளுக்கு தடை சொல்ல முடியாது என மறுத்துவிட்டார்.
இதையடுத்து சிம்பு, தனுஷ், விஷால் மூவரும் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவர்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தயாரிப்பாளர் சங்கம் 2 ஆக பிளவுபட்டு இருப்பதால், நடப்பு தயாரிப்பு சங்கம் இந்த விவகாரத்தில் குறுக்கீடு செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் இந்த ரெட்கார்டு விவகாரத்தை கையில் எடுத்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.





