- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்துக்கு பிறகு மாயமான இயக்குனர் வெங்கட்பிரபு, அந்த ஏரியாவுக்கு சென்றுவிட்டு வந்ததாக தகவல்...

தி கோட் படத்துக்கு பிறகு மாயமான இயக்குனர் வெங்கட்பிரபு, அந்த ஏரியாவுக்கு சென்றுவிட்டு வந்ததாக தகவல் – அப்போ புத்துணர்ச்சியுடன் மறுபடி ஸ்டார்ட் பண்ணுவாரா?

- Advertisement -

இசையமைப்பாளர் இளையராஜாவின் சொந்த தம்பி கங்கை அமரன். இவரும் இசையமைப்பாளர்தான். கரகாட்டக்காரன் போன்ற சில படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு, துவக்கத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால் நடிகராக பெரிய அளவில் அவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதையடுத்து லோக்கல் ஏரியா வாலிபர்களின் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி சென்னை 28 என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றி பெற்றது. தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, பிரியாணி, சென்னை 28 – 2ம் பாகம், தி கோட் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

- Advertisement -

இதில் மங்காத்தா, அஜீத்குமாரின் 50வது படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் சிம்பு நடித்த மாநாடு படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் விஜய் நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்று 455 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

ஆனால் தி கோட் படம் வெளியாகி 3 மாதங்கள் கடந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு குறித்த எந்த தகவலும் இல்லை. சிவகார்த்திகேயன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த கமிட்மென்டை 2025ம் ஆண்டு இறுதியில் பார்க்கலாம் என்று சிவகார்த்திகேயன் கூறி விட்டார். சென்னை 28 படத்தின் 3ம் பாகம் படத்தை இயக்க வெங்கட்பிரபு ஆயத்தமானதாக ஒரு தகவல் பரவியது.

- Advertisement -

ஆனால் சென்னை 28 படத்தின் முதல் பாகம் தயாரிப்பாளர் எஸ்பிபி சரணுக்கும் வெங்கட்பிரபுவுக்கும் இடையே உள்ள பனிப்போர் காரணமாக, சென்னை 28 படத்தின் 3ம் பாகத்தை இயக்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக தகவல் வெளியானது. அதனால் அந்த படத்தை இயக்கவும் வெங்கட்பிரபு எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்துவிட்டார்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு, கேரளாவுக்கு சென்று உளிச்சல் பிழிச்சல் எனப்படும் கேரள மூலிகை மருத்துவ சிகிச்சையை பெற்று புத்துணர்ச்சியுடன் திரும்பியிருக்கிறார். தி கோட் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்களை வைத்து வேலை வாங்கியதால் உடல், மனம் ரீதியாக ஏற்பட்ட களைப்பை போக்க இந்த மூலிகை சிகிச்சையை அவர் பெற்றிருக்கிறார். ஏற்கனவே ரஜினி, அஜீத்குமார் போன்றவர்கள் இந்த உளிச்சல், பிழிச்சல் கேரள மூலிகை சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனால் புத்துணர்ச்சியுடன் தனது அடுத்த படத்தை வெங்கட்பிரபு ஸ்டார்ட் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்