நடிகர் சூர்யா கங்குவா கங்குவா ரெட்ரோ படங்களை தொடர்ந்து இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்த படம் சூர்யா 45. இந்த படத்தில் திரிஷா ஷிவதா நாயர் லப்பர் பந்து நடிகை சுவாசிகா யோகிபாபு மன்சூர் அலிகான் நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது நிறைவு கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் சூர்யா 45 படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பெரிய வெற்றிப் படங்கள் இல்லை. அவர் நடித்த பல படங்கள் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தன. ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே வணிக ரீதியான வெற்றியை பெற்றன. மற்ற படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
கடந்த மே மாதம் 1ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ படம் வெளியானது. இந்த படம் தியேட்டரிக்கல் நான் தியேட்டரிக்கல் என மொத்தம் ரூ. 235 கோடி வசூலித்தது. இது வணிக ரீதியான வெற்றியாக பார்த்தாலும் விமர்சன ரீதியாக ரெட்ரோ படம் சூர்யாவின் பெயரை பேசவில்லை.
இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த சூர்யா 45 படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. வருகிற 20ம் தேதி இயக்குனர் ஆர்ஜே பாலாஜியின் பிறந்த நாள். அன்று இந்த படத்தின் டீசர் டைட்டில் அறிவிப்புடன் வெளியாக உள்ளது. சூர்யா 45 படத்துக்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் இந்த படத்துக்கு வேட்டை கருப்பு என்றுதான் டைட்டில் என்று கூறப்பட்டது. இப்போது வேட்டை என்ற வார்த்தையை நீக்கிவிட்டு கருப்பு என டைட்டில் வைத்துள்ளனர். ஆனால் வேட்டை கருப்பு என்பதுதான் கேட்பதற்கு ஒரு பக்தியாக மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் வேட்டை கருப்பு என்பது பிரபலமாகி விட்டதால் கருப்பு என ஆர்ஜே பாலாஜி டைட்டிலை மாற்றியதாகவும் தெரிய வருகிறது.





