- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... குட் பேட் அக்லி படத்தில் இருந்து அந்த இசையமைப்பாளர் வெளியேறுகிறாரா... புதியதாக இந்த இசையமைப்பாளர்தான்...

என்னது… குட் பேட் அக்லி படத்தில் இருந்து அந்த இசையமைப்பாளர் வெளியேறுகிறாரா… புதியதாக இந்த இசையமைப்பாளர்தான் வருகிறாரா… ஏன் இந்த திடீர் மாற்றம்…

- Advertisement -

அஜித் குமார் தற்போது இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வர அதில் விடாமுயற்சியை ஓவர் டேக் செய்திருக்கிறது குட் பேட் அக்லி. விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கி பெரும்பாலான காட்சிகள் நிறைவு பெற்ற பிறகு தான் குட் பேட் அக்லி படமே தொடங்கியது.

 

- Advertisement -

ஆனால் தற்போது ரேசில் முந்தி இருக்கும் இந்த திரைப்படம், அனேகமாக பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பான போஸ்டர்களில் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு தான் வெளியாகும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் தற்போது வரை சூட்டிங் சென்று கொண்டிருப்பதால், குறித்த நேரத்தில் படம் வெளியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

 

- Advertisement -

இந்தப் படத்தை இயக்கி வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். அஜித் குமாரின் தீவிர ரசிகரான அவர், நடிகரை வேறு ஒரு பரிணாமத்தில் காட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் வெளிப்பாடு தான், படத்தின் போஸ்டர்களில் அஜித் வித்தியாசமான லுக்கில் காட்சியளித்தது.

 

கையில் டாட்டூ, கலர் கலர் கண்ணாடி என அஜித்தின் தோற்றமே பலரும் வியக்கும் வகையில் உள்ளது. இதில் ஒரு போஸ்டரில் ஜெயில் கைதி உடையில் அஜித் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் பில்லா திரைப்படத்தின் போஸ்டர்கள் பிரதிபலிக்கப்பட்டன. ஒருவேளை அந்த திரைப்படத்திற்கும், இதற்கும் ஆதிக் ரவிச்சந்திரன் ஏதோ கனெக்ட் செய்து இருக்கிறாரோ என கேள்வி எழுந்தது.

 

விடாமுயற்சியை தொடர்ந்து இந்தத் திரைப்படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இது போக பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். இதன் சூட்டிங் முதலில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. பிறகு ஸ்பெயின் மற்றும் பல்கேரியாவில் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

 

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவர் படத்தில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதில் அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்