சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படுபவர் நடிகை வாணிபோஜன். ஓ மை கடவுளே போன்ற சில படங்களிலும் நடித்திருக்கிறார். செங்களம் என்ற வெப் சீரியலில் வாணிபோஜன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. தெய்வமகள் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் வாணி போஜன்.
ஊட்டியை சேர்ந்தவர் வாணிபோஜன். துவக்கத்தில் 3 ஆண்டுகள் பிரபல விமான நிறுவனம் ஒன்றில் 3 ஆண்டுகள் விமான பணிப்பெண்ணாக பணி செய்தவர். விஜய் டிவியில் ஆஹா என்ற தொடரில் நடித்து சின்னத்திரை நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அடுத்து தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு தொடர்களின் மூலம் பெரிய அளவில் மக்களிடம் பரிச்சயமானார்.
சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் தொடர்ந்து வெப் தொடர்களிலும், சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்கும் வாணி போஜன், தனது புகைப்படம், வீடியோ பதிவுகளை செய்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து டிரண்டிங்கில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், விமானப் பணிப்பெண்ணாக இருந்த நிலையில், தான் நடிகையாக மாறியது எப்படி என்பது குறித்து வாணி போஜன் கூறியதாவது, ஒரு தனியார் ஏர்லைன்ஸில் சூப்பர்வைசராக நான் பணி செய்து கொண்டிருந்தேன். நான் பெரிதாக படிக்கவில்லை என்பதால் டிகிரி எதுவும் வாங்கவில்லை.
ஆனால் நான் அனைவரிடமும் நன்றாக பேசுவேன், இயல்பாக பழகுவேன்.அது மற்றவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் வேலையில் சேர்ந்த 2 ஆண்டுகளில் பிரமோஷன் வாங்கி விட்டேன். அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அப்போது எனக்கு மற்றொரு ஏர்லைன்ஸில் இருந்து மேனேஜர் பதவிக்கான ஆஃபர் வந்தது. அந்த பணிக்கு நான் உறுதியும் செய்யப்பட்டேன்.
ஆனால் அப்போது அங்கு பணிபுரிந்த நபர் ஒருவர், எனக்கு டிகிரி இல்லை என்பதை சுட்டிக்காட்டி வாணி போஜனுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று கூறி தடுத்து விட்டார். அதன்பின் ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மா இருந்தேன். அப்போது முதன்முதலாக நான் ஜவுளிக்கடை ஒன்றுக்கு மாடலிங் செய்யச் சென்றேன். அதன்பிறகு தான் படிப்படியாக சீரியல் பக்கம் வந்தேன், நடிக்க ஆரம்பித்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன் என்று கூறியிருக்கிறார்.





