- Advertisement -
Homeபொழுதுபோக்குசிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயரா... இதில் அந்த நடிகரும் இருக்கிறாரா......

சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இப்படி ஒரு பெயரா… இதில் அந்த நடிகரும் இருக்கிறாரா… சரி இதுல அவரு கெட்டவரா இல்ல நல்லவரா…

- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், தனக்கு ஏற்ற திரைப்படங்களை கொடுத்து குடும்ப ஆடியன்ஸ்களை அதிகளவில் சம்பாதித்தார். முதலில் நகைச்சுவையை மட்டுமே தனது ஆயுதமாகக் கொண்டு அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுத்தன. இடையே சிறு சறுக்களையும் அவர் சந்தித்தார்.

 

- Advertisement -

பிறகு சுதாரித்துக் கொண்ட நடிகர், அடுத்தடுத்து கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். இதில் அவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் தான் டாக்டர். நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் டார்க் ஹியூமர் ரகத்தில் எடுக்கப்பட்டது. படத்தில் ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் காமெடி பட்டாசை கொளுத்திக் கொண்டிருக்க ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் மிகவும் அமைதியாகவே இருப்பார்.

 

- Advertisement -

இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் அந்தஸ்தை கொடுத்தது. அடுத்ததாக இவர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடித்த திரைப்படம் டான். அட்லியின் உதவியாளராக இருந்தவர் சிபி சக்கரவர்த்தி. அதன் தாக்கத்தை பெரும்பாலான காட்சிகளில் பார்க்க முடிந்தது என்றே கூறலாம்.

 

கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, காமெடி காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்த நிலையில், கிளைமாக்ஸ் இல் தந்தை செண்டிமெண்ட்டை காட்டி இருப்பார்கள். அது மிகச் சரியாக ஒர்க் அவுட் ஆனதால் இந்த திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் தனது பங்கிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

 

இப்படியான சூழலில் தான் சிவகார்த்திகேயன் மீண்டும் சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து இருக்கிறார். இது அவரின் 24 ஆவது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இதற்கான பட பூஜை நாளை தொடங்குகிறது. மிகக் குறுகிய காலத்தில் இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

 

டான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அதே கூட்டணியை இதிலும் நடிக்க வைக்க சிபி சக்கரவர்த்தி திட்டமிட்டு உள்ளாராம். அதன்படி எஸ் ஜே சூர்யா இதில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், படத்திற்கு பாஸ் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதனிடையே இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்