- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா போல, இந்த படம் பெரிய வெற்றியை பெறுமா? பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தெலுங்கு பட...

புஷ்பா போல, இந்த படம் பெரிய வெற்றியை பெறுமா? பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தெலுங்கு பட நடிகை – அவரது கனவு பலிக்குமா? எல்லாம் தனுஷ் கையில்தான் இருக்குது!

- Advertisement -

இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. கடந்த 2021ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என பிறமொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. புஷ்பராஜ் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அல்லு அர்ஜூனுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இதையடுத்து வருகிற டிசம்பர் 5ம் தேதி புஷ்பா 2 படம் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் தியேட்டர்களில் புஷ்பா 2 ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்திய திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு ஐமேக்ஸ் திரைகளில் அதிக எண்ணிக்கையில் வெளியாகும் முதல் படம் புஷ்பா 2 படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 800 தியேட்டர்களில் புஷ்பா 2 வெளியாகிறது.

- Advertisement -

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் தெலுங்கில் வெளியாகி ஹிட் ஆன நிலையில், தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

தொடர்ந்து சீதாராமம், டியர் காமரேட், புஷ்பா படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது. அதிலும் புஷ்பா படம் தந்த அபரிமிதமான வெற்றியால் இந்தியில் அனிமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அமைந்தது. இந்த படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சியில் அவர் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

- Advertisement -

அதே நேரத்தில் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்திலும் அடுத்து விஜயுடன் வாரிசு என்ற படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் ராஷ்மிகாவுக்கு அமையவில்லை. ஆனால் தமிழ் படங்களில் நடிப்பது, பலவிதங்களில் நடிகைகளின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும். இந்தி, மலையாளம், கன்னட வாய்ப்புகள் தானாக அமையும்.

இந்நிலையில் வரும் 5ம் தேதி புஷ்பா 2 படம் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். அதனால் குபேரா படம் பெரிய வெற்றியை பெற்றால் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்படும். அதனால் புஷ்பா படம் போல, குபேரா படமும் பெரிய வெற்றியை தந்தால் தமிழில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் ராஷ்மிகா மந்தனா காத்திருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்