- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு காமெடி நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு தொடர்ந்த...

ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு காமெடி நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு; சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் வடிவேலு என்று அவரை ரசிகர்கள் அழைக்கின்றனர். 1990 முதல், 2010ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் அவர் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். காமெடியில் தனி ராஜ்ஜியமே தமிழ் சினிமாவில் நடத்திய காட்டியவர் வடிவேலு.

ஆனால் சில பிரச்னைகள் காரணமாக கடந்த 2020 ஆண்டு வரை அவர் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்ட நிலையில், தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் நடித்து வருகிறார். காமெடி நடிப்பில் முன்பு போல இல்லாவிட்டாலும், மாமன்னன் படத்தில் அவரது குணச்சித்திர நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் அவருடன் இணைந்து நடித்தவர் சிங்கமுத்து. இம்சை அரசன் 23ம் புலிகேசி, திமிரு, ஆறு, அருள், சீனாதானா 007 என பல படங்களில் அவர்களது காமெடி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இருவரும் நெருங்கிய நண்பர்களாக தான் அப்போது இருந்தனர்.

இந்நிலையில் வடிவேலு, சிங்கமுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். வடிவேலு மீது கொண்ட கோபம் காரணமாக சில யூடியூப் சேனல்களில் பேசிய நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தார். அவருடன் நடித்த நடிகர்களுக்கு அவர் செய்த துரோகங்கள் என்று பல சர்ச்சையான விஷயங்களை பேசினார்.

- Advertisement -

தன்னைப்பற்றி யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசி வரும் நடிகர் சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அப்படி பேசி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ. 5 கோடி அவரிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும் என்று நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பல மாதங்களாக அந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 14ம் தேதி ஒத்தி வைத்தார். மேலும் அதுவரை நடிகர் சிங்கமுத்து, வடிவேலு குறித்து அவதூறான கருத்துகளை பேசக்கூடாது என்றும், அவர் ஏற்கனவே பேசிய பதிவுகள், யூடியூப்களில் இருப்பதால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என அந்த யூடியூப் சேனல்களுக்கு கடிதம் எழுதுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்