- Advertisement -
Homeபொழுதுபோக்குமத்தவங்களுக்காக நான் அதை தாராளமா செய்வேன், ஆனா எனக்குன்னா அப்படி செய்யவே மாட்டேன் - நடிகை...

மத்தவங்களுக்காக நான் அதை தாராளமா செய்வேன், ஆனா எனக்குன்னா அப்படி செய்யவே மாட்டேன் – நடிகை சாய்பல்லவி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்திருந்த இந்த படம், தமிழ் சினிமா ரசிகர்களால் மட்டுமின்றி இந்த படத்தை உலகம் முழுவதும் கொண்டாடினர். மொத்தம் 325 கோடி ரூபாய் வசூல் சாதனையை அமரன் படம் புரிந்திருக்கிறது.

அமரன் படத்தில் மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் மிடுக்கான நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதே போல் அவரது மனைவியாக இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் நடித்த சாய்பல்லவியும் தனது அழுத்தமான நடிப்பில் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார்.

- Advertisement -

அமரன் படத்தில் நடித்த பிறகு அபார வெற்றியின் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 55 கோடியாக உயர்த்திவிட்டார். அதே போல் நடிகை சாய்பல்லவியும் தனது சம்பளத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்திவிட்டதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை சாய்பல்லவி, தன்னை பற்றிய பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், எனக்கு மிகவும் நடிகை ஜோதிகா. காக்க காக்க படத்தில் அவரது நடிப்பை நான் ரொம்பவும் ரசித்தேன். அவரது இன்பிரேஷன் சில படங்களில், காட்சிகளில் என்னிடம் இருக்கும்.

- Advertisement -

நான் ஷெட்ல ஒரு மாதிரி இருப்பேன், வீட்ல ஒரு மாதிரி இருப்பேன். அப்பா அம்மா கூட இருக்கும்போது ஒரு மாதிரி இருப்பேன். ஒருமுறை யுஎஸ் போனப்போ, ஷாப்பிங் செஞ்சோம். அப்போ ஷூ நல்லா இருந்துச்சு. பில் கொடுத்ததுக்கு அப்புறம்தான் அது 15 ஆயிரம் ரூபான்னு தெரிஞ்சது. நான் காஸ்ட்லியா வாங்குனது அந்த ஷூ தான்.

எனக்குன்னு நான் எதுவுமே அதிக விலை கொடுத்து வாங்க மாட்டேன். என் அம்மா 10 ஆயிரம் ரூபா ஸாரி எடுக்கச் சொன்னா, 2 ஆயிரம் ரூபா ஸாரியே எனக்கு அழகா இருக்கு. எதுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸாரி எடுக்கணும் என்று கேட்பேன். ஆனால் இந்த சிக்கனம் எனக்கு மட்டும்தான். வீட்டுல மத்தவங்களுக்கு பெரிய விலை கொடுத்து எது வேண்டுமானாலும் தயங்காமல் வாங்க சொல்லிடுவேன். எனக்குன்னா மட்டும் வாங்கவே மாட்டேன் என்று நடிகை சாய் பல்லவி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்