- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரையுலக பயணத்தில் இன்று 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை திரிஷா, கோவையில் இன்று இப்படி...

திரையுலக பயணத்தில் இன்று 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை திரிஷா, கோவையில் இன்று இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறாரே? ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களை பெற்ற தோல்வி படம் கங்குவா. இந்த படத்தை பிரமாண்டமான பான் இந்தியா படமாக ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சரியான திரைக்கதை இல்லாததால் இந்த படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. எனினும் கங்குவா 2ம் பாகம் வெளிவரும் என படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 29ம் தேதி முதல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது. பிரமாண்ட கோவில் ஷெட் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் திரிஷா நடித்திருந்தார். பிறகு ஆறு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் 3வது முறையாக சூர்யாவுடன் இந்த படத்தில் திரிஷா இணைந்து நடிக்கிறார்.

சூர்யா 45 என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா, நடிகர் நட்டி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். வரும் 18ம் தேதியுடன் இங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு, பிறகு 2ம் கட்ட ஷெட்யூல் ஷூட்டிங் குறித்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே இன்று தனது 22வது ஆண்டு சினிமா பயணத்தை நிறைவு செய்தார் நடிகை திரிஷா. அதற்காக சூர்யா 45 படப்பிடிப்பு தளத்தில், நடிகை திரிஷா கேக் வெட்டி 22ம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடினார். தொடர்ந்து கோவை வடவள்ளியை அடுத்துள்ள மருதமலை முருகன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். இது முருகனின் ஏழாம்படை வீடாகும். கோவிலுக்கு வந்த நடிகை திரிஷாவை அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வமாக புகைப்படம், வீடியோ எடுத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

கங்குவா படத்தின் மாபெரும் தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா, பல்வேறு கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார். இப்போது சூர்யாவுடன் நடித்து வரும் திரிஷாவும் மருதமலை முருகன் கோவிலுக்கு திடீரென சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு இருக்கிறார். சூர்யாவுடன் நடிப்பதால், திரிஷாவுக்கும் ஆன்மிக நாட்டம் அதிகரித்து விட்டதா, என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்