ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். லியோ திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தை எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். தனது முந்தைய திரைப்படங்களைப் போன்று போதை பொருள் போன்ற எந்த ஒரு காட்சிகளும் இதில் இருக்காது என்று ஏற்கனவே இயக்குனர் உறுதி அளித்து இருந்தார்.
அதேசமயம் ஜெயிலர் மற்றும் வேட்டையன் திரைப்படத்தை போடவே, பிற மாநில நடிகர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். முக்கியமாக தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா இதில் நடித்திருந்தார். சைமன் என்னும் ரோலில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறார். இதேபோல் மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த, சோபின் சபீர் இதில் இடம் பெற்றிருக்கிறார்.
இது போக கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோரையும் லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்துள்ளார். தமிழில் இருந்து சத்யராஜ் மற்றும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். படத்தில் சத்யராஜுக்கு ரஜினிகாந்தின் நண்பர் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
இதில் தேவா என்னும் கதாபாத்திரத்தில் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தங்கக் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இது நிச்சயம் எல்சியுவுக்குள் வராது என்று ஏற்கனவே லோகேஷ் கூறியிருந்தார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
குறிப்பாக விசாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் பிரம்மாண்டமான செட்டு போட்டு முக்கியமான காட்சிகளை படமாக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த திரைப்படத்திலிருந்து சிக்கிடு பாடலின் முன்னோட்டம் வெளியானது. அனிருத் இசையில் பாடல் வழக்கம்போல் ஹிட் அடிக்க, ரஜினியின் நடன அசைவுகளும் பலரை கவர்ந்தது.
இதனிடையே, அடுத்த கட்ட படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் எடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் இந்தி திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரம் அமீர்கான் நடிப்பது உறுதியாக இருக்கிறது. இப்படியான சூழலில் அவர் மீசையை முறுக்கிவிட்டபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது அமீர்கானின் தோற்றம்தான் என பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், கூலி திரைப்படத்தில் அமீர்கானுக்கான தோற்றம் இது இல்லை என்றும் சினிமா விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





