நடிகர் விஜய் நடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்து விட்டதால் இன்னும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
கோட் படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என்ற இரண்டு வேடங்களில், நடித்திருக்கிறார். அத்துடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா, யோகி பாபு, டிடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அத்துடன் நடிகை திரிஷா, இந்த படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் விஜயுடன் சேர்ந்து போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே 52 கோடி கொடுத்து வாங்கி இருந்தது. ஆனால் விஜயின் 69வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விரும்பிய நிலையில், நடிகர் விஜயிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார். அதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம், கோட் படத்தின் சேட்டிலைட் உரிமைத்தை ரத்து செய்து அந்த படத்தை வாங்க விருப்பமில்லை என்று கூறிவிட்டது.
அதைத் தொடர்ந்து கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விற்க தொடர்ந்து அந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் முயற்சித்து வந்தது. இந்நிலையில் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமைத்தை ஜீ டிவி நிறுவம் 91 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. ஏறக்குறைய சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை காட்டிலும் 39 கோடி ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சாட்டிலைட் உரிமத்துடன், படத்தின் இந்தி டப்பிங் உரிமத்தையும் சேர்த்து அவர்கள் வாங்கியுள்ளனர் அதாவது கோட் படத்தை இந்தியில் டப்பிங் செய்து அவர்களை வெளியிடுவார்கள். அதாவது கோட் படத்தின் உரிமம் 71 கோடி ரூபாய் என்றால், இந்தி டப்பிங் வெர்ஷன் உரிமம் 20 கோடியாக என்று இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் 91 கோடியையும் மொத்தமாக தரப்போவதில்லை என்பதுதான் இதில் ஷாக்கிங் தகவலாக இருக்கிறது.
ஏனெனில் லால் சலாம் படத்தை 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய ஜீ டிவி நிறுவனம், முதலில் அட்வான்ஸாக 4 கோடி ரூபாயை மட்டுமே தந்துவிட்டு, மீதி 18 கோடியை மாதம் 1 கோடி வீதம் தவணை முறையில் கிரெடிட் செய்து வருகிறது. அதேபோல் கோட் படத்துக்கும் 91 கோடி ரூபாயை மாதந்தோறும் அதை தவணை முறையில் தரப் போகிறதா என தெரியவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த மெர்சல் படத்தை ஜீ டிவி நிறுவனம் 27 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், மொத்தமாக ஒரே பேமெண்டாக தயாரிப்பு நிறுவனத்திற்கு தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





