தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மலையாளத்தில் இருந்த அவரை, தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஹரி. சரத்குமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார்.
அடுத்து சந்திரமுகி வில்லு பில்லா யாரடி நீ மோகினி ராஜா ராணி பிகில் அறம் மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நயன்தாரா, இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயருடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். மண்ணாங்கட்டி என்ற படத்தை தொடர்ந்து இப்போது நடிகர் கவினுடன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகிகளில் ஒருவராக நயன்தாரா இருக்கிறார். அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சையில் அவர் சிக்கிக்கொள்வது வழக்கமாகி வருகிறது. முதலில் சிலம்பரசன், பிறகு பிரபுதேவா என 2 பேருடன் டேட்டிங்கில் இருந்த அவர், பிறகு அவர்களை விட்டு பிரிந்தார்.
அதன்பிறகு நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, அந்த படத்தின் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்துக்கொண்டார். பிறகு வாடகைத்தாய் மூலம் 2 பிள்ளைகளை பெற்றெடுத்து உயிர், உலக் என பெயர் வைத்து வளர்த்து வருகிறார். அடிக்கடி தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்.
இதற்கிடையே தனுஷ் குறித்து விமர்சித்து அவர் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி, ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், நயன்தாராவை பொருத்த வரை அவரது அழகுக்கும், திறமைக்கும் தாண்டி 100 மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறார்.
அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், இதற்காக இவ்வளவு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று யோசிப்பதே இல்லை. தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க சரியான கதாநாயகிகள் இல்லை. அதனால்தான் நயன்தாராவின் வண்டி இன்னமும் தமிழ் சினிமாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்று ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.





