- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் நவம்பரில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம், முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனிருத், அட...

வரும் நவம்பரில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம், முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனிருத், அட இப்படியும் ஒரு சிக்கல் வந்துடுச்சே என புலம்பும் தயாரிப்பாளர்கள்!

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாக ரசிகர்களால் கேட்கப்பட்டு வந்த ஒரு கேள்விக்கு சமீபத்தில் தான் பதில் கிடைத்தது. அதாவது திருமண வயது கடந்தும் பல ஆண்டுகளாக இசையமைப்பாளர் அனிருத் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். அதனால் அனிருத் கலந்து கொள்ளும் விழாக்களிலும் இசை நிகழ்ச்சிகளிலும் அனிருத் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் முக்கிய கேள்வியாக இருந்து வந்தது. இப்போது அதற்கு பதில் சமீபத்தில் கிடைத்துள்ளது.

சன் குழுமம் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை இசையமைப்பாளர் அனிருத் காதல் திருமணம் செய்ய உள்ளார். வரும் நவம்பரில் அவர்களது திருமணம் வெளிநாட்டில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த ஓராண்டாகவே அனிருத் – காவ்யா மாறன் இடையே காதல் நிலவுவதாகவும் இருவரும் வெளிநாடுகளில் அடிக்கடி ஒன்றாக காணப்படுவதாகவும் இணையத்தில் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வந்தது. இப்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

வருகிற நவம்பரில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் அனிருத் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது புதிதாக எந்த ஒரு படத்துக்கும் இசையமைக்க அனிருத் கமிட்டாகவில்லை என்பதுதான் அது. ஏற்கனவே அவர் கமிட்டான படங்களுக்கு இசையமைப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டில் அதாவது 2027ம் ஆண்டில் ஜனவரிக்கு பிறகு தான் புதிய படங்களில் இசையமைக்க ஒப்புதல் அளிக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு அவரது தரப்பிலிருந்து வெளியாகி உள்ளது. ஏனென்றால் இப்போது அவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே இசையமைக்க கமிட் ஆன படங்கள் வரிசையாக உள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு திருமணமும் நடைபெற உள்ளது.

- Advertisement -

அதனால் திருமண பரபரப்பில் காணப்படும் அவர் தொடர்ந்து புதிய படங்களை இசையமைக்க ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே கமிட் செய்த படங்களுக்கு மட்டும் இசையமைத்து முடித்து தந்து விட்டு பிறகு நவம்பர் மாதம் திருமணம், அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு மனைவியுடன் தேனிலவு பயணம் என்ற முடிவில் உள்ளார்.

இத்தகைய ஒரு சூழலில் புதிய படங்களை இசையமைக்க ஏற்றுக் கொள்வதில்லை, கமிட் செய்வதில்லை என்ற முக்கிய முடிவை அனிருத் எடுத்திருக்கிறார். அடுத்த ஆண்டில் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் அனிருத் தமிழ் உட்பட மற்ற மொழி படங்களுக்கும் இசையமைக்க திட்டமிட்டுள்ளார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இது தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்