- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்களோடு சேர்ந்து என்னால் நடிக்க முடியாது என மறுத்த ரஜினிகாந்த், அதற்கு என்னுடைய அந்த படம்தான்...

உங்களோடு சேர்ந்து என்னால் நடிக்க முடியாது என மறுத்த ரஜினிகாந்த், அதற்கு என்னுடைய அந்த படம்தான் காரணம் – வெளிப்படையாக சொன்ன பார்த்திபன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் அடுத்த 2026ம் ஆண்டில்தான் வெளியாக உள்ளது. இதுதவிர சில படங்களில் நடிக்கவும் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

நடிகர் பார்த்திபன், தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக கவிஞராக இருந்து வருகிறார். எதையும் வித்யாசமாக சிந்திக்கும், வித்யாசமாக உருவாக்கும் ஒரு படைப்புத்திறன் மிக்கவர் பார்த்திபன். அவர் இயக்கிய, நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன.

- Advertisement -

குறிப்பாக பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்த ஒத்தச் செருப்பு என்ற படம் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதே போல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படமும் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களின் பலத்த கவனம் பெற்றது. தனக்கு பிடித்தமான கேரக்டர்களை தேர்வு செய்து பார்த்திபன் நடித்து வருகிறார்.

நடிகர் பார்த்திபன் சினிமாவில் சில முக்கிய நடிகர்களுடன் நீண்டகால நட்பில் இருப்பவர். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா, பார்த்திபனின் குருநாதர் கே பாக்யராஜ், நடிகர் வடிவேலு என பலரது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் பார்த்திபன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் பார்த்திபன் கூறியதாவது, நானும் ரஜினியும் 41 நாட்களுக்கு ஒருமுறை அதாவது மண்டலத்துக்கு ஒருமுறை சந்திப்போம். ரஜினியே வீட்டுக்கு அழைப்பார். போனால் விடியவிடிய இருவரும் நிறைய பேசிக்கொண்டே இருப்போம். அப்போது அந்த மாதிரிதான் இருவரும் இருந்தோம். அந்த மாதிரி டைம்ல அவரே கேட்பார். நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்ணினால் எப்படி இருக்கும் என்பார். அப்போது என்னுடைய படம் உள்ளே வெளியே படத்தை ஒரு தியேட்டரில் அவரை கூட்டீட்டு போய் காட்டினேன்.

அதுக்கு முன்னாடி வரை ரஜினி ஒரு கதை சொல்லி, அதை நீங்க டைரக்ட் பண்ணுங்க, ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் உள்ளே வெளியே படம் பார்த்த பிறகு, அது சரியாக வராது. நீங்கள் கேமராவுக்கு பின்னாடியே இருங்க. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டாம். படம் பயங்கரமா இருக்கு பார்த்திபன், நான் இந்த விளையாட்டுக்கு வரலே என மறுத்து விட்டார், என்று பார்த்திபன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்