- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டி்ல் இருந்து இந்த வாரம் வெளியேறிய பிரபலம் இவர்தானா? 75 நாட்கள் தாக்கு பிடித்ததே...

பிக்பாஸ் வீட்டி்ல் இருந்து இந்த வாரம் வெளியேறிய பிரபலம் இவர்தானா? 75 நாட்கள் தாக்கு பிடித்ததே பெரிய விஷயமாம் – மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

விஜய் டிவியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கும் போட்டியாளர்கள், மக்களின் ஓட்டுகள் அடிப்படையில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுகின்றனர். இதில் வாரந்தோறும் சரியாக விளையாடாத, மக்களின் அதிருப்தியை பெற்ற போட்டியாளர்கள் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்படுகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 2024ம் ஆண்டில் 8வது சீசனாக நடந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இப்போது 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி துவங்கிய பிக்பாஸ் சீசன் 8வது நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இப்போது சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷன் பிராசஸில் ரயான் மற்றும் ரஞ்சித் இருந்தனர். தற்போது வெளியான தகவலின்படி நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ரெப்ரி முத்துக்குமரன் விஷால் அன்ஷிதா பவித்ரா ஜாக்குலின் மஞ்சரி தீபக் ரயான் ராணவ் சவுந்தர்யா உள்ளிட்டோர் இருக்கின்றனர். வரும் வாரங்களில் இவர்களில் ஒரு சிலர் வெளியேற்றப்பட்டு கடைசி வாரத்தில் 4 அல்லது 5 பேர் இறுதி செய்யப்பட்டு அவர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக, மற்ற ஒருவர் டைட்டில் ரன்னராகவும் அறிவிக்கப்பட உள்ளார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்தே நடிகர் ரஞ்சித் பல விமர்சனங்களை சந்தித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் ரஞ்சித் நுழைய வந்த போதே விஜய் சேதுபதி, கவுண்டம்பாளையம் பீஷ்மர் சிந்துநதிப்பூ படங்களை குறிப்பிட்டு அவரை கலாய்த்து பேசினார். அவருடன் வந்திருந்த நண்பர் ஒருவரையும் மேடையில் இருந்து பங்கம் செய்தார்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் நடிகர் ரஞ்சித் வெளியேற்றப்பட்டுள்ளார். 75 நாட்களுக்கு மேல் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த நிலையில், அவரது ஒரு நாள் சம்பளம் ரூ. 50 ஆயிரம் என கூறப்படுகிறது. அதனால் 37 லட்சம் ரூபாய்க்கு மேல் அவருக்கு கிடைக்கும் என்றாலும், அதிலும் வரியினங்கள் பிடித்தமாக சில லட்சங்கள் போக மீதிதான் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் கடைசி சில வாரங்களில் ரஞ்சித் மிக சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்