- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்கள், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? - புஷ்பா 2 விவகாரத்தில்...

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்கள், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா? – புஷ்பா 2 விவகாரத்தில் யோசிக்குமா தமிழக அரசு?

- Advertisement -

சினிமா என்பதே பொழுதுபோக்கு அம்சம்தான். சந்தோஷமாக பொழுதை கழிக்கவும், மனதில் உள்ள கவலைகளை, வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை மறந்து இரண்டரை மணி நேரம் மனதை ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ள மக்கள் அதிகளவில் தேடிச் செல்லும் ஒரு இடமாக தான் சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன.

ஆனால் ரஜினி கமல் விஜய் அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் நாட்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட முன்பு, தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால் துணிவு படம் வெளியான போது, அதிகாலை 4 மணி காட்சிக்கு வந்த ஒரு ரசிகர் லாரி மீது ஏறி நின்று ஆடி தவறி விழுந்த உயிரிழந்த சம்பவத்துக்கு பிறகு காலை 9 மணி காட்சிக்கு மட்டுமே அரசு சிறப்பு காட்சி அனுமதித்து வருகிறது.

- Advertisement -

இப்போது புஷ்பா 2 படம் ரிலீஸான போது, அதற்கு முந்தைய நாள் ஐதராபாத்தில் நடந்த பிரிமியர் காட்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.

ஆனாலும் பிரிமியர் ஷோ காண நடிகர் அல்லு அர்ஜூன் அங்கு வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம். போலீசார் அனுமதி மறுத்தும், அதை மீறி அவர் அங்கு வந்துள்ளார். அவரை பார்க்க திரண்ட ரசிகர் கூட்டத்தில் சிக்கிதான் அந்த பெண் உயிரிழந்தார் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையில் நேரடியாக குற்றம் சாட்டி பேசியிருக்கிறார்.

- Advertisement -

அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன. குறிப்பாக பொங்கலுக்கு அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி, ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், டைரக்டர் பாலா இயக்கிய வணங்கான் படங்கள் ரிலீஸாகின்றன. அதே போல் கூலி, தக்லைப், குட்பேட் அக்லி, சூர்யா நடித்த 2 படங்கள், விக்ரம் நடித்த வீரதீர சூரன் என பல பெரிய படங்கள் வெளியாக உள்ளன.

அதனால் இதுவரை காலை 9 மணி காட்சிக்கு அனுமதி தந்துவரும் தமிழக அரசு வழக்கமான காட்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். காலை 10.30 மணி, மதியம் 2.15 மணி, மாலை 6.15 மணி, இரவு 9.30 மணி என 4 காட்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். சிறப்பு காட்சி என்ற முறையை, தெலங்கானா அரசு ரத்து செய்தது போல, தமிழக அரசும் அதே முறையில் தியேட்டர்களில் 4 காட்சிகள் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்