- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 44 படத்தின் டீசர் கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ்... அதன் டைட்டில் இது தானா... சூப்பர் ஸ்டார்...

சூர்யா 44 படத்தின் டீசர் கிறிஸ்துமஸ்க்கு ரிலீஸ்… அதன் டைட்டில் இது தானா… சூப்பர் ஸ்டார் ரசிகர்-னு மறுபடியும் காட்டிய கார்த்திக் சுப்பராஜ்…

- Advertisement -

கங்குவா திரைப்படத்தின் படுதோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா, அடுத்தடுத்த திரைப்படங்களை விரைந்து கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார். ஏனென்றால் கங்குவா திரைப்படத்திற்காக அவர் ஒன்றரை ஆண்டுகள் செலவிட வேண்டி இருந்தது. இதனால் அவரது படம் திரையரங்குகளில் இரண்டு ஆண்டுகள் வராமல் இருந்தது. இனி அந்த தவறை செய்யக்கூடாது என்ற முடிவில் நடிகர் இருக்கிறாராம்.

 

- Advertisement -

தற்போது அவர் தனது 45 வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஆர் ஜே பாலாஜி இயக்கும் இந்தத் திரைப்படத்தில், திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லப்பர் பந்து சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

 

- Advertisement -

கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி படமாக இது உருவாவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சூர்யாவின் 44 ஆவது திரைப்படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

கார்த்திக் சுப்பராஜ் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முகமூடி பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பூஜா ஹெக்டே படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள். அந்தமானில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

 

முதலில் இந்த திரைப்படம் கேங்ஸ்டர் பாணியில் உருவாவதாக தான் கூறப்பட்டது. ஆனால் அண்மையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய கார்த்திக் சுப்பராஜ், சூர்யா நாற்பத்தி நான்காவது திரைப்படம் காதல் கலந்த ஆக்சன் காட்சிகளுடன் இருக்கும் என்று கூறி இருந்தார். சூர்யாவின் கெட்டப்பும் பலரும் திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.

 

அடுத்த ஆண்டு மே மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இரண்டும் கிறிஸ்துமஸை முன்னிட்டு, புதன்கிழமை மாலை வெளியாகிறது. இது ஒரு பக்கம் இருக்க படத்திற்கு ஜானி என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. ஏற்கனவே இதே டைட்டிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் தன்னை ரஜினி ரசிகர் என்பதை வெளிப்படுத்தி விட்டார் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்