- Advertisement -
Homeபொழுதுபோக்குகையில் வெடிகுண்டுடன் காரில் இருந்து இறங்கி மாஸ் காட்டும் விக்ரம்... விறுவிறுப்பாக ஓடும் வீர தீர...

கையில் வெடிகுண்டுடன் காரில் இருந்து இறங்கி மாஸ் காட்டும் விக்ரம்… விறுவிறுப்பாக ஓடும் வீர தீர சூரன் பட டீசர்… எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா…

- Advertisement -

விக்ரம் அண்மையில் நடித்து வெளியான திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி சிறப்பாக இல்லை என்று பலரும் கூறினர். இதனால், தங்கலான் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர தவறியது.

 

படமும் வந்த வேகத்தில் திரையரங்குகளில் இருந்து வெளியேறியது. ஆனால் தங்கலானை தயாரித்த ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டி விட்டதாக அறிவித்தது. இது ஒரு பக்கம் இருக்க தற்போது வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி முடித்திருக்கிறார் விக்ரம்.

 

சித்தா திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குனர் அருண்குமார்தான் இந்த படத்தை எடுத்துள்ளார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிக் கொண்டு வந்த அருண், அங்கிருந்து பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தை எடுத்து இயக்குனராக மாறினார்.

 

பிறகு இவரது இயக்கத்தில் சேதுபதி மற்றும் சிந்துபாத் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதில் சிந்துபாத் மட்டும் சரி வர ஓடவில்லை. இப்படியான சூழலில் தான் அவர் விக்ரமுடன் கை கோர்த்திருக்கிறார். ஒரே இரவில் நடைபெறும் கதையாக வீரதீரசூரன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

இதில் போலீஸ் அதிகாரியாக எஸ் ஜே சூர்யா, விக்ரமின் மனைவியாக துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில் இந்த திரைப்படம் குறித்து பேசிய அருண்குமார், இது இரண்டாம் பாகம் என்பதால் எடுத்த உடனேயே கதை ஆரம்பித்து விடும். முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடைபெறும் கதையாகதான் இதனை எழுதி இருக்கிறேன். படத்தில் ஒரு பத்து பதினைந்து காட்சிகள் மட்டும்தான் இருக்கும். ஆனால் ஒவ்வொரு காட்சிகளும் சற்று நீளமாக எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

 

இப்படியான சூழலில் வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டீசர் வெளியாகி உள்ளது. விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகள் உடன், எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனத்துடன், விக்ரமின் ஆக்சன் சீன் உடன் பட்டையை கிளப்புகிறது இந்த டீசர். அதிலும் அவர் காரில் இருந்து இறங்கி கையில் வெடிகுண்டை எரியும் காட்சி மாஸாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை இதற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சற்று முன்