இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு. தமிழில் உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் திருப்பாச்சி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் சென்னை 28 படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறினார். முதல் படத்திலேயே வெற்றி முத்திரையை பதித்தார்.
தொடர்ந்து சரோஜா கோவா சென்னை 28 படம் 2ம் பாகம் மாசு என்கிற மாசிலா மணி மங்காத்தா மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில் மங்காத்தா அஜீத்குமாரின் 50வது படமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே போல் சிம்பு நடித்த மாநாடு படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆல் டைம் படத்தை வெங்கட்பிரபு இயக்கினார். இதில் விஜய் 2 வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருந்தார். இதில் மகன் கேரக்டரை வில்லனாக காட்டியிருந்தார். வில்லன் நடிப்பில் அதகளம் செய்திருந்தார் நடிகர் விஜய். தி கோட் படத்தின் வெற்றியை உறுதிபடுத்தியதே விஜயின் வில்லன் கேரக்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு கூறியதாவது, விஜய் மிகச் சிறந்த நடிகர். அவரை இந்த சினிமா சரியாக பயன்படுத்தாமல் ஒரு கமர்சியல் வட்டத்துக்குள் வைத்து அடக்கி விட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. தனது மகன் ஜீவனை காணவில்லை என்று தி கோட் படத்தில் விஜய் அழும் காட்சியில் ஓவர் எமோஷனலாக நடித்து விட்டார்.
நான் இன்னொரு டேக் கேட்டேன். அவர் உடனே எதற்காக இன்னொரு டேக் என்று கேட்டார். நான் அதற்கு உங்கள் மகன் மீண்டும் கிடைத்து விடுவான் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கும். அந்த எண்ணத்தோடு நடியுங்கள் என்று சொன்னேன். உடனே அவரும் மறுப்பு சொல்லாமல் நான் கேட்ட மாதிரி நடித்துக் கொடுத்தார்.
அந்த சீனுக்கு நாயகன் படம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. விஜய் அந்த சீனில் நடித்ததை பார்த்து ஸ்பாட்டில் இருந்து அனைவருமே கைகளை தட்டி விஜயை பாராட்டினார்கள். அதேபோல் சினேகாவிடமும் தனது மகன் இறந்ததை சொல்லாமலேயே புரிய வைக்க வேண்டும். அந்த சீனிலும் விஜய் அருமையாக நடித்திருப்பார் என்று வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





