நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். அவரது சமீபத்திய படம் கங்குவா எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை என்றாலும், அவரது 44வது படம் ரெட்ரோ மற்றும் ஆர்ஜே பாலாஜி இயக்கும் 45வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த படங்கள் நிச்சயம் பெரிய வெற்றி படங்களாக இருக்கலாம்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பாடகர் கிரிஷ், நடிகர் சூர்யா குறித்து கூறியதாவது, நானும் நடிகர் சூர்யாவும் சிங்கம் 3 படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு ஒரே காரில் சென்றோம். அப்போது தெருவில் ஒருவர் விபத்தில் அடிபட்டு தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்தார்.
அவரைச் சுற்றி மக்கள் பலரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவரை காப்பாற்ற, அவருக்கு உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. ஆனால் இதை பார்த்தவுடன் உடனடியாக காரில் இருந்து இறங்கிய சூர்யா, அடிபட்டு கிடந்தவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் சூர்யா.
அங்கு அவருக்கு உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது உயிரை காப்பாற்ற முடிந்தது. நான் இப்படி ஒரு உதவியை செய்திருக்க மாட்டேன், கண்டிப்பாக யோசித்து இருப்பேன். ஆனால் சூர்யா உடனடியாக அந்த இடத்தில் விபத்தில் அடிபட்டு கிடந்தவரை உடனடியாக காப்பாற்ற முன்வந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க செய்தார்.
இது எப்படி உங்களால் முடிந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு சூர்யா சொன்ன ஒரே பதில், இப்படி ஒருவர் நினைத்திருந்தால் என் தம்பி கார்த்தி இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டான் என்றார். எனக்கு அதைக் கேட்டதும் அதிர்ச்சியாகி விட்டது.
சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி கல்லூரியில் படித்த போது, ஒருநாள் அவர் விபத்தில் சிக்கினார். அப்போது அந்த விபத்தில் கார்த்தியின் தலையில் பலத்த அடிபட்டு தெருவில் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் உடனடியாக கார்த்தியை மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். அதனால்தான் இன்று கார்த்தி உயிருடன் இருக்கிறார் என்று சூர்யா கூறினார் என்று பாடகர் கிரிஷ் அந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.





