தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக முக்கிய படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் பாலா. சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலா, இதுவரை பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக நந்தா நான் கடவுள் அவன் இவன் தாரை தப்பட்டை பிதா மகன் பரதேசி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்போது அவரது இயக்கத்தில் வணங்கான் படம் வெளிவர இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகர்கள் சூர்யா விக்ரம் ஆர்யா அதர்வா விஷால் ஆகியோரது பெரிய அளவில் நல்ல கலைஞர்களாக பெயர் வாங்கிக் கொடுத்த பெருமை இயக்குனர் பாலாவுக்கு உண்டு. சேது படம் இல்லை என்றால் விக்ரம் என்ற நல்ல நடிகரை ரசிகர்கள் நழுவ விட்டிருப்பவர். நந்தா படம்தான் சூர்யாவின் நடிப்பு திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது.
சமீபத்தில் வணங்கான் படம் இசை வெளியீட்டு விழா, இயக்குனர் பாலாவுக்கு 25ம் ஆண்டு நிறைவு பாராட்டு விழா நடந்தது. இதில் குருவின் மேன்மையை மறக்காமல் நடிகர் சூர்யா, தனது தந்தை சிவக்குமாருடன் கலந்துக்கொண்டு இயக்குனர் பாலாவுக்கு பெருமை சேர்த்தார். வணங்கான் பட ஹீரோ அருண் விஜய், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.
ஆனால் இந்த விழாவில் முக்கியமாக பங்கேற்க வேண்டிய நடிகர்கள் ஆர்யா விஷால் விக்ரம் அதர்வா உள்ளிட்டோர் வரவே இல்லை. ஆனால் பாலாவின் படத்தில் இதுவரை நடிக்காத சிவகார்த்திகேயன், அருண் விஜய் அண்ணாவின் அழைப்பை ஏற்று இந்த விழாவுக்கு வந்தேன் என்று பெருமிதமாக குறிப்பிட்டு பேசினார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் அருண் விஜய், சீனியர் நடிகர் விஜயகுமாரின் மகன். ஆனால் இதுவரை நடிப்பில் அருண் விஜய் பெரிய அளவில் வரவேற்பை பெற முடியவில்லை. குறிப்பாக என்னை அறிந்தால் படத்தில் அஜீத்குமாருக்கு வில்லனாக நடித்திருந்தார். பாண்டவர் பூமி படத்தில் அவரது நடிப்பு அதிக கவனம் பெற்றது. தடம் குற்றம் 23 மிஷன் சேப்டர் 1 இயற்கை தடையற தாக்க பிரியம் தவம் காத்திருந்த காதல் என பல படங்கள் அவரை நல்ல நடிகராக தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தியது.
இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டில் அருண் விஜய் நடித்த வணங்கான், ரெட்ட தல பார்டர் வா டீல் இட்லிக்கடை அக்னி சிறகுகள் என 6 படங்கள் அடுத்தடுத்த வெளியாக உள்ளது. பாலா இயக்கத்தில் வணங்கான் படம் ஒரு பெரிய வெற்றியை தரும் பட்சத்தில், இட்லிகடை படத்தில் அவரது வில்லன் நடிப்பும் அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டு அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான ஆண்டாக அமைய அதிக வாய்ப்புள்ளது.





