- Advertisement -
Homeபொழுதுபோக்குநிஜ வாழ்க்கையில் அப்படியே தன் அப்பாவை பின்பற்றும் நடிகை ஸ்ருதிஹாசன்; அது மட்டும்தான் பிடிக்குமாம்… ஆனா...

நிஜ வாழ்க்கையில் அப்படியே தன் அப்பாவை பின்பற்றும் நடிகை ஸ்ருதிஹாசன்; அது மட்டும்தான் பிடிக்குமாம்… ஆனா ஆர்வமே இல்லையாம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இதுவரை 236 படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்த படம் அடுத்த ஆண்டில் ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து கமல், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ருதிஹாசன், இளைய மகள் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். இவர்களது அம்மா சரிகாவை கமல் பிரிந்து வாழ்ந்தாலும், தன் மகள்களுடன் நிறைய பாசம் காட்டி வருகிறார் அப்பா கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் சலார் 2 படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். தமிழை காட்டிலும் தெலுங்கில் நிறைய படங்களில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன்கூறியதாவது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசையாக இருந்தது. அது இப்போது கூலி படத்தின் மூலம் நிறைவேறிவிட்டது. இந்த படத்தில் ரஜினி சாருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி அவரிடமிருந்து பல விஷயங்களை நான் இந்த படப்பிடிப்பின் போது கற்றுக் கொண்டேன்.

- Advertisement -

ஒரு நபருடன் உறவில் இருப்பது என்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது ரிலேஷன்ஷிப்பை மிகவும் லைக் பண்ணுவேன். அதேபோல் காதலிப்பது என்பது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம். ஆனால் யாருடனாவது என்னை இணைத்துக் கொள்ள ஆசைப்பட்டாலும், எனக்கு மிகவும் பிடித்த நபரை இதுவரை நான் சந்திக்கவில்லை.

அதன் காரணமாக திருமணத்தைப் பற்றி இதுவரை நான் யோசித்துப் பார்க்கவில்லை. அதோடு எனக்கு இப்போதைக்கு திருமணத்தில் ஆர்வமும் இல்லை என்று ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக இதில் சொல்லி இருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதிஹாசன் சிலருடன் லிவிங் டூ ரிலேஷன்சிப்பில் இருந்தவர். அதாவது தாலி கட்டிக்கொள்ளாமல் ஒரு ஆணுடன் ஒரே வீட்டில் வாழும் உறவு முறையில் ஸ்ருதிஹாசன் இருந்தவர். நடிகர் கமலும் நடிகை கௌதமியுடன் அப்படி பல ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்