- Advertisement -
Homeபொழுதுபோக்குபடுதோல்வியை சந்தித்த தெலுங்கு படம், படத்தின் நாயகி சாய்பல்லவி செய்த தரமான சம்பவம் - நம்ம...

படுதோல்வியை சந்தித்த தெலுங்கு படம், படத்தின் நாயகி சாய்பல்லவி செய்த தரமான சம்பவம் – நம்ம ஹீரோக்களுக்கு கூட இந்த எண்ணம் வராதே?

- Advertisement -

பிரேமம் என்ற மலையாள படத்தில் நடித்து மலர் டீச்சராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் சாய்பல்லவி. பிறகு தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் என்ஜிகே என்ற படத்திலும், நடிகர் தனுஷூக்கு ஜோடியாக மாரி 2 ஆகிய படங்களில் சாய் பல்லவி நடித்திருந்தார்.

அதன்பிறகு சாய்பல்லவி நடித்த கார்கி படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை பற்றிய உண்மை தெரியாமல், கடைசி வரை அவரை காப்பாற்ற போராடுவதும், உண்மை தெரிந்தவுடன் அவரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பதும் என அழுத்தமான நடிப்பை தந்திருந்தார்.

சமீபத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து ரெபாகா வர்கீஸ் கேரக்டரில் சாய் பல்லவி சிறந்த நடிப்பை தந்திருந்தார். இந்த படம் உலகளவில் ரூ. 325 கோடி வசூலை கடந்த படமாக பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு விருதுகள் கிடைத்து வருகின்றன.

மேலும் இந்தியில் சாய்பல்லவி இப்போது ராமாயணம் என்ற படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாகவும் கேஜிஎப் நாயகன் யாஷ் வில்லனாகவும் நடிக்கிறார். அதாவது ராமர், ராவணன் கேரக்டர்களில் அவர்கள் நடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான படம் பாடி பாடி லெச்சே மனசு. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாகவும் ஷர்வானந்த் நாயகனாகவும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகும்போது வாங்கிய அட்வான்ஸ் தொகையை தவிர, மீதி சம்பளப் பணத்தை சாய்பல்லவி வாங்கவில்லை. அந்த படம் படுதோல்வி அடைந்ததால், மீதி பணம் வேண்டாம் என்று தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். அந்த வகையில் அவர் ரூ. 40 லட்சம் வரை அந்த படத்துக்கான மீதி சம்பளத்தை வாங்காமல் விட்டிருக்கிறார். அந்த அளவுக்கு நடிகை சாய் பல்லவி மனிதநேயத்துடன் நடந்திருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டுகின்றனர். இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சற்று முன்