- Advertisement -
Homeபொழுதுபோக்குநீ இனிமே அந்த மாதிரி படங்களில் நடிக்காதே, நடிகர் ராகவா லாரன்ஸூக்கு அட்வைஸ் செய்த பிரபலம்...

நீ இனிமே அந்த மாதிரி படங்களில் நடிக்காதே, நடிகர் ராகவா லாரன்ஸூக்கு அட்வைஸ் செய்த பிரபலம் – ஆனா இந்த படத்துல நடிக்க சொல்லியிருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனமும் வரவேற்பும் பெற்றவர். ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். பல வெற்றிப் படங்களை தொடர்ந்து தந்துக்கொண்டு இருக்கிறார்.

அற்புதம் என்ற படத்தில் நாயகனாக நடித்த ராகவா லாரன்ஸூக்கு முனி என்ற திகில் திரில் படம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து காஞ்சனா 2 காஞ்சனா 3 என படங்களை இயக்கிய அவர், இப்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி வருகிறார். மேலும் பிற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்கிறார்.

- Advertisement -

சினிமா நடிகராக நடன இயக்குனராக மட்டுமின்றி கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வமும் அக்கறையும் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அதனால் மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கி, 11 விவசாயிகளுக்கு 11 டிராக்டர்களை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்க பல கோடி ரூபாய்களை செலவு செய்து வருகிறார்.

தன் அம்மாவின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டுள்ள ராகவா லாரன்ஸ், அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். தன் அம்மாவின் மீதுள்ள அதீத அன்பின் காரணமாக, தனது படங்களிலும் பாசக்கார மகனாகவே பல படங்களில் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தனது அம்மா பேய் படங்களில் நடிக்குமாறு கூறியதாக அவரே கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, இப்போது சமீபகாலமாக நான் நடிக்கும் படங்களில் 6 சண்டைக் காட்சிகள் வந்து விடுகின்றன. ருத்ரா சந்திரமுகி 2 ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என தொடர்ந்து படப்பிடிப்புகள் அப்போது நடந்து கொண்டிருந்தது.

என் அம்மா அவ்வப்போது எனக்கு போன் செய்வார். அப்போது என்ன பண்ணீட்டு இருக்கே என்று கேட்பார். நான் பைட் பண்ணீட்டு இருக்கேம்மா என்று சொல்வேன். அதற்கு அவர் ஏம்பா, நீ இவ்ளோ பைட் பண்றே? ஜாலியா அம்மா இடுப்பு மேல ஏறி உட்கார்ற அந்த பேய் படமே பண்ணுப்பா நீ. பைட் எல்லாம் வேண்டாம்பா என்று அட்வைஸ் செய்வார் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்