அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். முதல் படமே ரசிகர்களின் கவனம் பெற்ற வெற்றிப் படமாக இருந்த நிலையில் தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து கபாலி காலா என அடுத்தடுத்து ரஜினி படங்களை இயக்கினார்.
கபாலி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், காலா படம் அவ்வளவாக பெரிய வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் ரஜினி ஈஸ்வரி ராவ் மணிகண்டன் சமுத்திரக்கனி நானா படேகர் உள்ளிட்டோரின் நடிப்பு படத்தில் மிக அழுத்தமாக இருந்தது. ரஜினி படங்களை இயக்கியதால் ஸ்டார் டைரக்டராக பா ரஞ்சித் மாறினார்.
அவரது இயக்கத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் தங்கலான். சியான் விக்ரம் பார்வதி பசுபதி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஏனோ ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. குறியீடுகள் என்ற பெயரில் பல தேவையற்ற விஷயங்களை பா ரஞ்சித் புகுத்திவிட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்த ஆண்டில் வெளியான விஜய் படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம்தான், இந்த ஆண்டில் தமிழில் வெளியான படங்களில் 445 கோடி ரூபாய் வசூலித்து முதலிடம் பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ. 325 கோடி வசூலித்த அமரன் 2ம் இடம், ரூ. 265 கோடி வசூலித்த வேட்டையன் 3ம் இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் விஜய் நடித்த தி கோட் படம் குறித்து இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் பேசியதாவது, கோட் படத்துக்கு ஆதரவாக விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை. ஆனால் வசூலில் இந்த படம் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. கோட் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தன.
இந்த படத்தை எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்று பலரும் முயற்சி செய்தனர். ஆனால் அது எதுவும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்து கொண்டாடினர் என்று இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருக்கிறார். ஆனால் அந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இன்னும் அடுத்த படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறார் என்பதுதான் கசப்பான உண்மை.





