நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். திமிரு சண்டக்கோழி தாமிரபரணி சிவப்பதிகாரம் நான் சிவப்பு மனிதன் மலைக்கோட்டை பாண்டியநாடு பூஜை துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய வெற்றியை பெறவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த ரத்னம் படமும் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து நடிகர் சூர்யாவை போலவே விஷாலும் பிளாப் படங்களாக தந்து வருகிறார்.
இதற்கிடையே கடந்தாண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தில் விஷாலுடன் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவும் நடித்திருந்தார். அவரது நடிப்புதான் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பெரிய துணையாக இருந்தது. விஷால் மட்டுமே நடித்திருந்தால் அந்தளவுக்கு படம் ரசிகர்களை கவர்ந்திருக்காது.
இந்த சூழலில் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை அவரே நடித்து இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர் யாரும் முன்வராததால் அந்த படம் இயக்குவதில் தொடர்ந்து விஷாலுக்கு சிக்கல் நீடிக்கிறது. இதனால் விஷால் தனது சொந்த தயாரிப்பில் அந்த படத்தை தயாரிக்க முயற்சித்து வருகிறார்.
அத்துடன் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் இரும்புத்திரை. இந்த படத்தின் 2ம் பாகத்தை அவர் எடுக்க உள்ளதாகவும் மீண்டும் அர்ஜூன் விஷால் இணைந்து நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. சர்தார் 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு இரும்புத்திரை 2 படப்பிடிப்பை இயக்குனர் பிஎஸ் மித்ரன் துவங்க இருக்கிறார்.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படம் வால்டர் வெற்றிவேல். 1993ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் சுகன்யா விஜயகுமார் கவுண்டமணி செந்தில் நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மாஸ் ஹிட் படமான வால்டர் வெற்றிவேல் படத்தை ரீமேக் செய்து சத்யராஜ் கேரக்டரில் நடிக்க விஷால் தயாராகி வருகிறார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.





