- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படத்தில் வெங்கட்பிரபு செய்த மற்றொரு தரமான சம்பவம், அட இவரும் கோட் படத்தில் வருகிறாரா?...

விஜய் படத்தில் வெங்கட்பிரபு செய்த மற்றொரு தரமான சம்பவம், அட இவரும் கோட் படத்தில் வருகிறாரா? – போடு வெடிய, அசத்தறாங்கப்பா!

- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை தொடர்ந்து அவர் தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் துவக்க விழா வரும் ஜூன் 22 அன்று விஜய் பிறந்த நாளில் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் துவங்குகிறது. விஜய் 69 படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில், பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இதில் சினேகா, மீனாட்சி சௌத்ரி இருவரும் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளனர். இதுதவிர நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், கஞ்சா கருப்பு, ரம்யா கிருஷ்ணன், கனிகா லைலா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. கடந்த 14ஆம் தேதி விசில் போடு என்ற பாடல் வெளியான நிலையில், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் விஜய் நடித்த போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். செந்தூரப்பாண்டி படத்தில் தனது தம்பியாக விஜயை நடிக்க வைத்து, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல அறிமுகத்தை விஜய்க்கு ஏற்படுத்தி கொடுத்தவர் விஜயகாந்த். அந்த நன்றிக்காக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை, தன்னுடைய படத்தின் விஜய் நடிக்க வைக்க வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் கேமியோ ரோலில் வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் படக்குழுவினர் பேசி சம்மதம் பெற்றுள்ளனர். அந்த காட்சியை, என்னிடம் காட்டி விட்டு பிறகு, அதை படத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பிரேமலதா கூறியிருக்கிறார். இந்த படத்தில் கேமியோ ரோலில் ஏஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் மீண்டும் திரையில் வருகிறார் என்பது சினிமா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

அதேபோல் இந்த படத்தில் மற்றொரு முன்னணி நடிகரும் ஏஐ தொழில்நுட்பத்தில் ரசிகர்களை சந்திக்க வருகிறார். அவரும் சமீபத்தில் மறைந்த நடிகர்தான். தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட காமெடி நடிகர் விவேக் தான் இந்தப் படத்தில் சில காட்சிகளில் ஏஐ தொழில்நுட்பத்தில் வருகிறார். அதற்கான ஏற்பாடுகளையும் வெங்கட் பிரபு செசெய்திருக்கிறார். இப்படி விஜயகாந்த், விவேக் என மறைந்த முன்னணி நடிகர்கள் இருவருமே, கோட் படத்தில் வரப் போகிறார்கள் என்பது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்