- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசை இவரும் எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டாரே? பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இதுதான் காரணம், சமத்துவ...

தமிழக அரசை இவரும் எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டாரே? பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இதுதான் காரணம், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் அதிரடி கருத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். துவக்கத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்து பிறகு நடிகரானவர். கண் சிமிட்டும் நேரம் சரத்குமார் நடித்த முதல் படம். பிறகு ராஜா கைய வெச்சா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் புலன் விசாரணை படம்தான் சரத்குமாருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் வனத்துறை அதிகாரியாக கேமியோ ரோலில் நடித்திருந்தார். கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படம் சரத்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து சூரியன் சாமுண்டி நாட்டாமை நட்புக்காக சூரியவம்சம் போன்ற படங்கள் பெரிய ஹீரோவாக அவரை மாற்றியது.

- Advertisement -

இந்த சூழலில் 1996ம் ஆண்டில் சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த நடிகர் சரத்குமார் அரசியல் களத்தில் அதிக ஆர்வம் காட்டினார். அதனால் சினிமாவில் அதிக வரவேற்பை பெறாமல் நாளடைவில் அவரது படங்கள் முந்தைய வரவேற்பை பெறவில்லை. அரசியலிலும் பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக ஹீரோ வாய்ப்பின்றி குணச்சித்திர வேடங்களில் சரத்குமார் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் போர்த்தொழில் நிறங்கள் மூன்று தி ஸ்மைல் மேன் போன்ற படங்களில் சரத்குமார் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதுவரை 150 படங்களில் சரத்குமார் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சூரியவம்சம் படத்தில் நடித்த போது சரத்குமாருக்கும் ராதிகாவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அவருக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் சரத்குமாரிடம் தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சரத்குமார், இதுபோன்ற செயல்களுக்கு தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்திருப்பதே காரணம். போதை கலாசாரத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்கும், என்று கூறியிருக்கிறார். அதாவது போதை ஒழிப்பில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்