வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று சொல்லப்ட்டாலும் தொடர்ந்து முயற்சித்தாலும் கிடைக்கும் சில தோல்விகள்தான் மனிதர்களை மிகவும் பக்குவப்படுத்துகிறது. அவர்களது மிகப்பெரிய வெற்றிகளுக்கு அந்த தோல்விகள் தரும் பக்குவமும் மிக முக்கியமான காரணமாகிறது. அதனால்தான் தோல்வியை வெற்றிக்கு முதல் படி என்கின்றனர்.
அந்த வகையில் ஹீரோ மிஸ்டர் லோக்கல் அயலான் போன்ற தோல்வி படங்களை தந்த சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் மாவீரன் படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தது. இப்போது அமரன் படம் தந்த அபார வெற்றியால் அவர் 75 கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றனர்.
மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 1965 என்ற படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஏஆர் முருகதாஸ் இந்தியில் சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் ஷூட்டிங்கில் இருப்பதால், சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படம் தற்காலிகமாக தடைபட்டுள்ளது. அதனால் 1965 படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருக்கிறார்.
சென்னையில் பச்சையப்பா கல்லூரில் எதிரில் உள்ள ஒரு பழமையான பள்ளியில் கடந்த சில வாரங்களாக 1965 படப்பிடிப்பு, சுதா கொங்கரா இயக்கத்தில் நடந்து வருகிறது. அங்கு சிவகார்த்திகேயனுக்கு கேரவன் தரப்பட்டுள்ள நிலையில், கேரவனுக்கு மிக அருகில் சிவகார்த்திகேயனின் ஆபீஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
அங்கு அவரது ஆட்கள் சோபா டேபிள் சேர் எல்லாம் போட்டு ஒரு தற்காலிக அலுவலமாக அங்கு பணிசெய்கின்றனர். அடுத்தடுத்த படங்கள் குறித்தும், அவரது இணையதள ஊழியர்களும் இங்கு பணிசெய்வதாக கூறப்படுகிறது. ஷூட்டிங் நடுவே இடையிடையே அலுவலக பணிகளை பார்த்துவிட்டு கேரவனுக்கு செல்வது சிவகார்த்திகேயனின் வழக்கமாக உள்ளது.
சிவகார்த்திகேயனை விட சீனியர் நடிகரான ஜெயம் ரவி, படப்பிடிப்பு தளத்தில் மேக்கப் மேன் டச்சப் மேன் ஆகிய 2 பேருடன் மட்டுமே மிக சாதாரணமாக காணப்படுகிறார். ஷாட்டில் நடித்துவிட்டு அவ்வப்போது கேரவன் சென்று வருகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆபீஸ் நடத்துவதை பார்த்து, அமரன் பட வெற்றியால் அலப்பறை ஓவரா இருக்குதே, என படக்குழுவினரே கமெண்ட் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.





