பொதுவாக ரசிகர்களுக்கு என அபிமான நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். அதே போல் சினிமாத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கும் பிடித்தமான கலைஞர்கள் இருப்பார்கள். எம்ஜிஆர் சிவாஜியை பார்த்து நடிக்க ஆசைப்பட்டு திரைத்துறைக்கு வந்த நடிகர்களும் இருக்கின்றனர்.
அதே போல் ரஜினி கமலை பார்த்து சினிமாவுக்குள் வந்த நடிகர்கள், இயக்குனர்கள் இருக்கின்றனர். இப்போதும் தங்களது அபிமான நடிகர்களை குருவாக சொல்லும் நடிகர்களையும் தமிழ் சினிமாவில் பார்க்க முடிகிறது. அதே போல் திறமை உள்ள நடிகர்களுக்கு அவர்களது வளர்ச்சி காலத்தில் உதவிய நடிகர்களும் இருக்கவே செய்கின்றனர்.
அந்த வகையில் பல ஹீரோக்கள், தன்னுடன் பல நடிகைகள் நடித்தாலும் ஒரு சிலரை மட்டுமே அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த நடிகையுடன் நடிப்பதை சௌகரியாக உணர்வார்கள். அதே போல் சில நடிகைகளுக்கு அந்த ஹீரோ நடிகருடன் நடிக்க ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும்.
ஆனால் உச்சத்தில் உள்ள ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் போன்ற டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்க எல்லா நடிகர்களும், நடிகைகளும் விரும்புவார்கள். ஏனென்றால் இவர்களுடன் நடித்தால் அவர்களது இமேஜ் சினிமாவில் தாறுமாறாக உயர்ந்துவிடும். சம்பளத்தையும் கணிசமாக உயர்த்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
அதே நேரத்தில் பெரும்பாலான நடிகர்கள் அல்லது நடிகைகள் இவர்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகை அல்லது பிடித்த நடிகர் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் கேம் சேஞ்சர் பட நாயகன் ராம்சரண், நடிகர் பாலகிருஷ்ணாவுடன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இதுபற்றி வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
அன்ஸ்டாப் பபிள் என்பிகே 4வது சீசன் என்ற நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் படம் பிரமோசனுக்காக ராம்சரண், கியாரா அத்வானி பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் பாலகிருஷ்ணா, ராம்சரணிடம் கியாரா அத்வானி சமந்தா ஆலியா பட் இவர்களில் சிறந்த நடிகை யார் என கேள்வி எழுப்பினர். அதற்கு ராம்சரண், எனக்கு மிகவும் பிடித்த நடிகை சமந்தா என்று பகிரங்கமாக சொல்லி இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டில் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான ரங்கஸ்தலம் என்ற படத்தில் ராம்சரணும் சமந்தாவும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





