- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் - நடிகை நயன்தாரா ஆவணப்படம் விவகாரம்; முக்கிய நிபந்தனையுடன் இறுதி விசாரணையை வரும்...

நடிகர் தனுஷ் – நடிகை நயன்தாரா ஆவணப்படம் விவகாரம்; முக்கிய நிபந்தனையுடன் இறுதி விசாரணையை வரும் 22ம் தேதி தள்ளிவைத்த நீதிபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். பாடகர் தயாரிப்பாளர் இயக்குனர் என தமிழ் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ், நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக நயன்தாரா நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த போதுதான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் ஏற்பட்டது. அதன்பிறகு 7 ஆண்டுகள் காதலித்த நிலையில், 2023ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.

- Advertisement -

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண வீடியோ, கடந்த மாதம் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த வீடியோவில் நடிகர் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை நயன்தாரா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அந்த வீடியோவை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி ஜனவரி 8ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

- Advertisement -

அதன்படி சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று (8ம் தேதி) அந்த வழக்கு விசாரணை, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சார்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். மேலும் அன்றைய தினத்தில் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையும் நடைபெறும் என்றும் கூறி, இந்த வழக்கை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்