- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு, விமர்சித்த இயக்குனர் ஷங்கர் - அப்போ...

லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு, விமர்சித்த இயக்குனர் ஷங்கர் – அப்போ அதுக்கு சான்ஸ் இருக்குதா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இப்போது கேம் சேஞ்சர் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். நாளை ( 10ம் தேதி) கேம் சேஞ்சர் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்தியன் 3 பிரச்னையில், லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் நீடித்த பிரச்னை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை குறித்து லைகா நிர்வாகிகள், இயக்குனர் ஷங்கர், அமெரிக்காவில் இருந்து நடிகர் கமல் ஆகியோர் கான்ஸ்பரன்ஸ் வீடியோ காலில் பேசியுள்ளனர். இதில் கமல்ஹாசன் தமிழ்நாடு திரும்பிய பிறகு பேசிக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் நாளை வெளியாகிறது.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பான் இந்தியா படமாக கேம் சேஞ்சர் உருவாகியுள்ளது. இதில் ராம் சரண் 2 வேடங்களில் நடித்துள்ளார். அரசியல்வாதிகளின் அராஜகத்தை தட்டிக் கேட்கும் கலெக்டர் கேரக்டரில் நடித்துள்ளார்.

இதில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிகை அஞ்சலி நடிகர்கள் சமுத்திரக்கனி எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இதில் பாடல்களுக்காக மட்டும் ரூ, 75 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர், கடந்தாண்டில் வெளியாகி ரசிகர்களின் அபார வரவேற்பை பெற்ற லப்பர் பந்து படம் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக நடிகர் அட்டக்கத்தி தினேஷ் குறித்து கூறுகையில், 2024ம் ஆண்டில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்த படம் லப்பர் பந்துதான்.

ரொம்பவும் அருமையான இருந்த இந்த படத்தில் நான் ரொம்பவும் ஆச்சரியப்பட்டது நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பை பார்த்துதான். சூப்பராக ஆக்டிங் அது. யாருடைய சாயலும் இல்லாமல் அவர் இயல்பாக நடிக்கிறார். அலட்டிக்காமல் நடிக்கிறார். அதே நேரத்தில் சரியாகவும் நடிக்கிறார். இன்னும் கேட்டால் நடிக்கிறாரா என்பதே தெரியவில்லை. ரொம்ப அற்புதமான நடிப்பாக இருக்கிறது. தினேஷ் என்னை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். அதனால் அடுத்த ஷங்கர் படத்தில் அட்டக்கத்தி தினேஷூக்கு ஒரு கேரக்டர் கிடைத்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

சற்று முன்