- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் என்ன பிரபுதேவாவா, இல்லே கமலா… ஷூட்டிங்கில் கோபப்பட்ட நடிகர் ரஜினி - நடந்த சம்பவத்தை...

நான் என்ன பிரபுதேவாவா, இல்லே கமலா… ஷூட்டிங்கில் கோபப்பட்ட நடிகர் ரஜினி – நடந்த சம்பவத்தை புட்டு புட்டு வைத்த இசையமைப்பாளர் தேவா!

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரசிகர்கள் மத்தியில் அவரது பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தேனிசை தென்றல் தேவா என்று அழைக்கப்பட்டார். வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து காதல் கோட்டை ஆசை நேருக்கு நேர் சூரியன் அண்ணாமலை பாட்ஷா சேரன் பாண்டியன் ஒன்ஸ்மோர் வசந்த காலப் பறவை என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. அதுமட்டுமின்றி பல படங்களில் சொந்த குரலில் தேவா கானா பாடல்களையும் பாடியிருக்கிறார்.

- Advertisement -

இன்றும் சில திரையிசை பாடல்களை கேட்கும் சிலர், அது இளையராஜா இசையமைத்த பாடல் என்று கருதியிருப்பார்கள். ஆனால் அது உண்மையில் தேவா இசையமைத்த பாடலாக இருக்கும். ஏனெனில் பல கிராமிய படங்களுக்கு இளையராஜா போலவே சூப்பராக தேவா இசையமைத்திருப்பார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவா கூறியதாவது, பாட்ஷா படத்தில் முதலில் நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்ற முதல் பாடல் உருவாகவில்லை. அந்த பாடலை ஆட்டோ சூப்பர் ஆட்டோ என்றுதான் ஸ்டைலான ஒரு பாடலாக உருவாக்கினோம். அதில் ரஜினி ஸ்டைலாக பேசி சிரிப்பது போல் வரிகள் அமைத்திருந்தோம்.

- Advertisement -

ஆனால் அந்த பாடலை கேட்ட ரஜினி டென்சனாகி விட்டார். என்ன சார் இது, நான் என்ன பிரபுதேவா வா, இல்லே கமலா… இந்த மாதிரி பாட்டுக்கு நான் எப்படி டான்ஸ் பண்ண முடியும்? அடிங்கப்பா சும்மா லோக்கலா என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன்பிறகு ஆட்டோக்காரன் பாடலை மெட்டு அமைத்து வைரமுத்து பாடல் வரிகளில் உருவாக்கினோம்.

ஏய் கப்பல் பாரு கப்பல் பாரு கப்பல் மேல டோரா பாரு டோரா பக்கத்துல ஆயா பாரு ஆயா கையில குழந்தை பாரு குழந்தை வாயில பழத்தை பாரு, பழத்துக்குள்ள புழுவை பாரு புடவை கையில் பொட்டு பாருடா என்ற பாடலை மெட்ட மாத்தி தான் ஆட்டோக்காரன் பாட்டை கொண்டு வந்தோம். வைரமுத்து 5 நிமிடங்களில் அந்த பாட்டை எழுதி தந்து விட்டார், என்று தேவா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்