- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வரும் மதகஜ ராஜா - இதில் அந்த ஹீரோ கேமியோ...

12 ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வரும் மதகஜ ராஜா – இதில் அந்த ஹீரோ கேமியோ ரோலில் நடித்திருக்காரா? – டைரக்டர் சுந்தர் சி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் உருவான படம் மதகஜ ராஜா. நடிகர்கள் விஷால் சந்தானம் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பு நிறுவனம் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி ஆகியவை இணைந்து தயாரித்தது.

ஆனால் சில பொருளாதார நெருக்கடிகள் சிக்கல் காரணமாக மதகஜ ராஜா படம் ரிலீஸ் செய்யப்படாமல் 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. பலகட்ட முயற்சி நடந்தும் இந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இந்த சூழ்நிலையில் 12 ஆண்டுகள் கடந்து வருகிற 12ம் தேதி மதகஜ ராஜா படம் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்துவரும் நடிகர் சந்தானம், 12 ஆண்டுகளுக்கு முன் காமெடியனாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்தில் மதகத ராஜா படத்தில் நடித்திருக்கிறார். கலகலப்பு தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்த படத்தில் சுந்தர் சி இயக்கத்தில் சந்தானம் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மதகஜ ராஜா படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவலை இயக்குனர் சுந்தர் சி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான அரண்மனை 3 படத்தில் தான் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்த படம் முதல் படம் என்று அரண்மனை 3 என கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் ஆரியா நடித்திருக்கிறார் என்பது ஒரு கூடுதல் தகவல். அதற்கு முந்தைய 2011ம் ஆண்டில்தான் விஷால் ஆர்யா இணைந்து நடித்த இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான அவன் இவன் படம் வெளியானது.

அவன் இவன் படத்தில் நடித்த இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்ட நிலையில் தான் மதகஜ ராஜா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஆர்யாவை விஷால் நடிக்க வைத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. அதே போல் ஆர்யாவும் சந்தானமும் இணைந்து நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்