- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது இரண்டும் இல்லை என்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை - பரபரப்பை ஏற்படுத்திய இசைஞானி இளையராஜாவின்...

அது இரண்டும் இல்லை என்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை – பரபரப்பை ஏற்படுத்திய இசைஞானி இளையராஜாவின் பேச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா என்றாலே மனசுக்குள் மத்தாப்பூ பூக்கும். கடந்த 47 ஆண்டுகளாக இசையால் ரசிகர்களை வசப்படுத்தியவர். இன்றும் அவரது குரலில் தெனந்தெனமும் உன் நெனப்பு பாடலை கேட்கும் போது மனசுக்குள் காந்தமாக அவரது குரலின் இனிமை இழுத்துக்கொள்கிறது.
இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்து பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.

இதுபோன்ற பல ஆயிரம் பாடல்களை இளையராஜா தந்திருக்கிறார். எஸ்பி பாலசுப்ரமணியம் கேஜே ஜேசுதாஸ் மலேசியா வாசுதேவன் மனோ பி ஜெயச்சந்திரன் அருண்மொழி என இவரது இசையில் ஒலித்த இந்த பாடகர்களில் குரலில் வழிந்தது எல்லாமே தேனிசைதான். பி சுசீலா சித்ரா எஸ் ஜானகி ஸ்வர்ணலதா சுனந்தா குரல்களில் ஒலித்தது என்றென்றும் தெவிட்டாத தேனிசைதான்.

- Advertisement -

இசையில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, இசைக்கு ராஜாவாக 80 வயதுகளை கடந்தும் கோலோச்சி வருகிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரது பேச்சு, செயல்பாடு மற்றவர்களிடம் அவர் கோபமாக நடந்து கொள்ளும் விதம் பலவிதமான விமர்சனங்களை சர்ச்சைகளை பலமுறை ஏற்படுத்தி இருக்கிறது. அதை எல்லாம் கடந்து ஒரு உன்னத கலைஞனாக அவர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

தற்போது சென்னையில் ஐஐடி சாரங் கொண்டாட்டம் நடந்து வருகிறது. நேற்று (ஜனவரி 9ம் தேதி) முதல் வருகிற 13ம் தேதி வரை இந்த நிகழ்ச்சி ஐஐடியில் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐஐடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வரும் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

நேற்று இரவு நடந்த இந்த கலாசார நிகழ்ச்சியில், இசைஞானி இளையராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது விழா மேடையில் பேசிய இசைஞானி இளையராஜா, ஐஐடியில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மிகச்சிறந்த விஷயமாக பார்க்கிறேன்.

இசை உலகமெல்லாம் பரவியுள்ளது. இதயத்தில் இருந்து வருவதுதான் இசை. இசைக்கு மதம், மொழி கிடையாது. இந்தியாவில் சுதந்திர வேட்கையை ஊட்டியதும் இசைதான். கலையும் இசையும் இல்லை என்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று பரபரப்பாக பேசி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. அதன் பின் பாரதியாரின் பாடல் ஒன்றை மாணவர்கள் மத்தியில் இளையராஜா பாடினார். இளையராஜாவின் குரலில் பாடல் கேட்டு மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

- Advertisement -

சற்று முன்