- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடிக்கும் தர்மன் படம் டைட்டிலில் இத்தனை விவகாரங்களா? ராமராஜன் முதல் விஜய் ஆண்டனி வரை...

ரஜினி நடிக்கும் தர்மன் படம் டைட்டிலில் இத்தனை விவகாரங்களா? ராமராஜன் முதல் விஜய் ஆண்டனி வரை – முக்கிய தகவலை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

ஒரு திரைப்படத்துக்கு முகமாக இருப்பது அந்த படத்தின் டைட்டில்தான். அதனால் முன்னணி நட்சத்திர ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு டைட்டில் என்பது அதிக கவனத்தை தருகிறது. ஆனால் கதையை யோசிக்கவே நேரமில்லாத இயக்குனர்கள், டைட்டிலை யோசிக்கவும் நேரமின்றி கதாநாயகன் பெயரையோ அல்லது பழைய படங்களின் டைட்டிலையே தங்களது படங்களுக்கு வைத்துவிடுவது தொடர்ந்து நடக்கிறது. இதில் ரஜினி நடித்து வரும் தர்மன் பெயரும் சில சிக்கல்களை சந்தித்திருக்கிறது.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, ராமராஜன் நடித்த தர்மன் படத்தை எடுத்து முடித்து சென்சார் செய்து விட்டு படத்தை வெளியிடாமல் இருந்தால், ரஜினி படத்துக்கு தர்மன் என டைட்டில் வைக்க முடியாது. அந்த பெயர் செல்லாது. ஏனென்றால் ஏற்கனவே ராமராஜன் நடித்து முடித்த படம் அந்த பெயரில் உள்ளது.

- Advertisement -

ஒருவேளை ராமராஜன் நடித்த தர்மன் படத்தை சென்சார் பண்ணலே. ஆனால் ஆண்டுதோறும் அந்த படத்தை ரெனிவல் செய்தாலும் ரஜினி படத்துக்கு தர்மன் பெயரை வைக்க முடியாது. ஆனால் ராமராஜன் நடித்த தர்மன் படம் முடியவே இல்லை. சென்சாருக்கும் போகலே. படத்தை ரெனிவல் பண்ணவும் அவங்க மறந்துட்டாங்க.

அந்த அடிப்படையில்தான் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ரஜினி நடிக்கிற படத்துக்கு தர்மன் என்று பெயர் வைத்து ஷூட்டிங் போயிட்டு இருக்கு. ஆனா தெலுங்கில் தர்மன் என்ற பெயரில் இந்த படத்தை வெளியிடுவதில் ஆபத்து இருந்தது. ஏற்கனவே ஒரு பிரபலம் தன்னுடைய ஒரு படத்துக்கு தெலுங்கு சினிமாவில் தர்மன் என்ற டைட்டிலை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ரஜினி தரப்பில் கேட்பதற்கு முன்பே அவர் அந்த டைட்டிலை விட்டுத் தர தயாராக இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல. நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான். ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்காக பராசக்தி டைட்டிலை விட்டுக்கொடுத்தது போல ரஜினிக்காக தர்மன் டைட்டிலையும் விட்டு கொடுத்துட்டார்.

ரஜினி நடிக்கிற படம், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கிற படம் என்பதால் கேட்காமலேயே தனது தர்மன் பட டைட்டிலை தூக்கி கொடுத்துட்டார். மத்தவங்க யாராக இருந்தால் இதற்காக ஒரு பெரிய அமௌண்ட் கேட்டிருப்பார்கள். ஆனால் விஜய் ஆண்டனி பணத்துக்கு ஆசைப்படாமல் தனது டைட்டிலை ரஜினி படத்துக்கு கொடுத்து விட்டார் என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்