- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 படம் விவகாரம் எதிரொலி; அதிரடி உத்தரவிட்ட ஆந்திரா உயர்நீதிமன்றம் - தமிழ்நாட்டிலும் இதை...

புஷ்பா 2 படம் விவகாரம் எதிரொலி; அதிரடி உத்தரவிட்ட ஆந்திரா உயர்நீதிமன்றம் – தமிழ்நாட்டிலும் இதை செயல்படுத்த கோரிக்கை!

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துணிவு படம் வெளியான போது சென்னையில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு வந்த ரசிகர்களில் ஒருவர், லாரி மீது ஏறி ஆடினார். அப்போது தடுமாறி லாரியில் இருந்து ரோட்டில் விழுந்து உயிரிழந்தார்.

அன்று முதல் தமிழ்நாட்டில் புதிய படங்கள் ரிலீஸாகும்போது முன்பு போல அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளுக்கு அரசு அனுமதி தரப்படுவதில்லை. காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி, பிறகு வழக்கமான 4 காட்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கிறது. அதுவும் ஒரு நாள் மட்டுமே இந்த சிறப்பு அனுமதி தரப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் 4ம் தேதி ஐதராபாத்தில் சந்தியா தியேட்டரில் நடந்த பிரிமியர் கட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அதிரடியாக அறிவித்தது.

ஆனால் நேற்று ரிலீஸான சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்திற்கு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, இது தொடர்பான பல வினாக்களை எழுப்பினார். சிறப்பு காட்சிக்கு அனுமதி தரமாட்டோம் என்று அறிவித்துவிட்டு பிறகு அனுமதி வழங்கியது ஏன்,
தூக்கத்தை தொலைத்துவிட்டு சினிமா பார்க்க வேண்டுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து இந்த வழக்கை ஜனவரி 24ம் தேதி தள்ளி வைத்தார்.

- Advertisement -

இதற்கிடையே ஆந்திரா உயர்நீதிமன்றம் இதுகுறித்த தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி அனுமதி வழங்கப்பட்ட அதிகாலை 1 மணி, 4 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால் பொங்கல் வெளியீட்டில் எந்த தெலுங்கு படத்திற்கும் அதிகாலை காட்சிகள் இருக்காது. அதிகாலை காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி இல்லை. அதேபோல் வரும் நாட்களில் ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பு காட்சிகள், சிறப்பு கட்டண உயர்வு ஆகியோருக்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை.

நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதால் மாநில அரசுகள் அப்படியான அனுமதியிலிருந்து பின்வாங்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டிலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும்போது வழக்கமான 4 காட்சிகள் மட்டுமே திரைப்படப்பட வேண்டும். காலை 10 மணி மதியம் 2 மணி மாலை 6 மணி இரவு 9 மணி என 4 காட்சி நேரங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்தியில் அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்