- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் செய்த அந்த விஷயம், ரசிகராக பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் - இதைப் பத்தி...

ரஜினிகாந்த் செய்த அந்த விஷயம், ரசிகராக பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் – இதைப் பத்தி யாருமே இதுவரைக்கும் பேசலையே…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் டான்ஸராக தனது பயணத்தை துவங்கி, அடுத்த சில ஆண்டுகளில் டான்ஸ் மாஸ்டராக மாறி ஒரு கட்டத்தில் நடிக்க துவங்கி, இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். அவர் இயக்கி நடிக்கும் காஞ்சனா சீரிஸ் படங்கள் பெரிய வெற்றியை பெற்று வருகின்றன.

இப்போது காஞ்சனா 4 படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே பேய் கேரக்டரில் நடித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் மக்களுக்கு உதவும் நலத்திட்டங்களை செயல்படுத்தும் நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அறக்கட்டளை துவங்கி, அந்த சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்காக அறக்கட்டளை நடத்தி அவர்களை தனது சொந்த செலவில் படிக்க வைக்கிறார். இதற்காக மட்டும் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் அவர் செலவு செய்கிறார். தனது சினிமா வருமானத்தில் பெரும்பகுதியை மக்களுக்கு உதவுவதில் ராகவா லாரன்ஸ் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சினிமாவில் ஆரம்பத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனிடம் உதவியாளராக இருந்தவர் ராகவா லாரன்ஸ். ஒருமுறை ரஜினி முன் அவர் நடனமாடி காட்டியிருக்கிறார். அவரை சினிமா டான்சர்ஸ் யூனியனில் சேர்த்துக்கொள்ள கடிதம் கொடுத்த ரஜினிகாந்த், பிறகு பிரபுதேவாவிடம் சொல்லி உங்கள் நடனக்குழுவில் அந்த பையனை சேர்த்துக்குங்க என சிபாரிசும் செய்திருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகு அண்ணாமலை பாடல் காட்சியில் டான்ஸராக சினிமா வாழ்வை துவங்கிய மாஸ்டர் ராகவா லாரன்ஸ், இன்று வரை ரஜினி தனக்கு செய்த உதவியை பல இடங்களில் சொல்லி வருகிறார். சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகரான அவர், எப்போதுமே ரஜினி குறித்து தன் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ரஜினிகாந்த் குறித்து ஒரு விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, 100 வது படம் ராகவேந்திரா சுவாமிகள் படத்துல நடிக்கிற ஒரு சூப்பர் ஸ்டாரை காட்டீடுங்க பார்க்கலாம். 100வது படம் யாராவது நடிக்கணும் என்றால் அந்த படம் மாஸா வரணும். ஸ்டைலா இருக்கணும். அப்படிப்பட்ட ஒரு படத்தைதான் செலக்ட் பண்ணி நடிப்பாங்க. ஆனா இந்த குரு மட்டும்தான் ஆன்மீகத்தை வெளியே சொல்லணும் என்று நடித்த படம் சுவாமி ராகவேந்திரர் என ராகவா லாரன்ஸ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்