- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தின் கதை இதுதான்… ஓபனாக சொன்ன டைரக்டர் மகிழ் திருமேனி - அட ஏகேவோட...

விடாமுயற்சி படத்தின் கதை இதுதான்… ஓபனாக சொன்ன டைரக்டர் மகிழ் திருமேனி – அட ஏகேவோட கேரக்டரே இதுதானே என குதூகலித்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. லைகா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஜீத்குமாருடன் திரிஷா அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

துணிவு படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. வருகிற ஜனவரி 23ம் தேதி அல்லது 30ம் தேதி ரிலீஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்ற சந்தேகமும் நீடிக்கிறது.

- Advertisement -

ஏனெனில் ஹாலிவுட் படம் பிரேக் டவுன் என்ற படத்தின் கதையை காப்பியடித்துதான் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாகவும், அந்த பஞ்சாயத்தில் ரூ. 30 கோடி வரை லைகா புரடக்சன்ஸ் தர வேண்டிய சூழலில் படம் ரிலீசில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் நடந்து வரும் அஜீத்குமார் கார் ரேஸிங் போட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் டிரைவராக இல்லாமல், அணியின் தலைவராக மட்டுமே இந்த போட்டியில் அஜீத்குமார் கலந்துக்கொள்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியிடம், படத்தின் கதை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு மனிதனோட சோர்வடையாத முயற்சிதான் இந்த படம். அஜீத்குமாரின் கேரக்டருக்கு இந்த படத்தில் சில லேயர்ஸ் இருக்கிறது.

படத்தின் மையக் கதையுடன் உறவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயமும் இருக்கு. எல்லாத்தையும் ஒரு சேர காப்பாற்றுவதற்கு ஒரு மனிதன் நடத்தக் கூடிய பிரயத்தனம்தான் இந்த கதை என்று மகிழ் திருமேனி கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பின்புலம் இன்றி ஜெயித்த அஜீத்குமாரின் நிஜ கேரக்டரே இதுதான் என்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்