- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது என் கடமை - பொங்கல் வாழ்த்துகளை சொன்ன...

என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது என் கடமை – பொங்கல் வாழ்த்துகளை சொன்ன நடிகர் அஜீத்குமார்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜீத்குமார். இப்போது அவரது நடிப்பில் விடாமுயற்சி, குட்பேட் அக்லி படங்கள் அடுத்து வெளிவர உள்ளன. நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் நடந்து முடித்த கார் ரேஸ் போட்டியில் கலந்துக்கொண்டார். அஜீத்குமார் கார் ரேஸிங் அணியின் தலைவராக இருந்த அஜீத்குமார், பயிற்சியின் போது அவர் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது. இதையடுத்து போட்டியில் இருந்து அஜீத்குமார் விலகியதாக அறிவித்தார்.

அதன்பிறகு நடந்த 24எச் சீரிஸ் கார் ரேஸ் போட்டியில், 992 பிரிவில் அஜீத்குமார் அணி 3ம் இடத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து திரைத்துறை சார்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் சினிமா ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அஜீத்குமார் பங்கேற்கும் கார் பந்தய போட்டியை நேரில் காண, ஏகேவின் ரசிகர்கள் பலர் துபாய்க்கு நேரில் சென்றுள்ள்னர். நடிகர் மாதவன் நேரில் அஜீத்குமாரை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் தனக்கு குவிந்த பாராட்டு வாழ்த்து மழையால் மனம் மகிழ்ந்த அஜீத்குமாரும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.நடிகர் அஜீத்குமார் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் கூறியிருப்பதாவது, துபாய் கார் ரேஸ் போட்டியின் போதும், அந்த நிகழ்வுக்குப் பின்பும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும், ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர் திரைத்துறையினர் ஊடகங்கள் அரசியல் தலைவர்கள் விளையாட்டு பிரமுகர்கள் நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

- Advertisement -

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்ஸில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது.

இந்த பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல, உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகள், நன்றி என்று அந்த பதிவில் நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்