- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு இப்படி ஒரு விமர்சனமா... சிறப்புத் திரையிடல்...

தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு இப்படி ஒரு விமர்சனமா… சிறப்புத் திரையிடல் காட்டிய பிறகு தான், ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கிறார்களா…

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கத்தில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரின் ஐம்பதாவது திரைப்படமாக எடுக்கப்பட்ட இது, வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, குபேரா என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரன் கெட்டப்பில் வரும் தனுஷின் தோற்றமே அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள், முடிவடைந்திருக்கும் சூழலில் மே அல்லது ஜூன் மாதம் குபேரா திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தனுஷ் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

தேனி மாவட்டத்தில் இதற்கான சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இது பீரியட் படமாக எடுக்கப்பட்டிருப்பது அதன் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது. அனேகமாக ஒரு ஹோட்டல் மையப்படுத்தியே இதன் கதை நகரும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தத் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதே தேதியில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் ஒரே தேதியில் அஜித் மற்றும் தனுஷின் திரைப்படங்கள் மோத இருக்கின்றன.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க ராயன் திரைப்படத்தை முடித்த கையோடு தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், தனுஷின் சகோதரி மகன் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இது முன்னதாக பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமே ரிலீஸ் செய்கிறது. இப்படி இருக்க நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை உதயநிதி மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தினர் அண்மையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போய்விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரிலீஸ் தேதியை மாற்றக் கூறியதாகவும், அதனைத் தொடர்ந்தே பிப்ரவரி 21ஆம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்